புதன், பிப்ரவரி 27, 2013


இலங்கைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்: பாராளுமன்ற மேல்-சபையில் விவாதம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும்
மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக, ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா சார்பில் புதிய தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து, டெல்லி மேல்-சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. மைத்ரேயன் (அ.தி.மு.க.), திருச்சி சிவா (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் இதற்கான நோட்டீசுகளை கொடுத்து இருக்கிறார்கள்.

வெங்கையா நாயுடு (பா.ஜனதா), சஞ்சய் ராவத் (சிவசேனா) ஆகியோரும் இது குறித்து கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது இன்று (புதன்கிழமை) மேல்-சபையில் விவாதம் நடைபெறுகிறது. அப்போது இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்.