புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இலங்கை விஜயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இம்மாதம் 10ம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்கின்றனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதன் பொருட்டே செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான குழு இலங்கை வருவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவினை லண்டனில் சந்தித்து உரையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து கமலேஷ் சர்மா உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
இவரது விஜயத்துக்கு முன்னதாக மேலதிக ஏற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் முன்கூட்டியே இலங்கைக்கு வருகை தந்து அதற்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களை வகுத்து வரும் குழுக்களுக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அமைச்சின் அதிகாரி கூறினார். கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இங்கிருக்கும் காலப்பகுதியில் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான பிரத்தியேக இணையதளம் மற்றும் விசேட இலச்சினை ஆகியன உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்க வைக்கப்படும் இடம், கூட்டம் நடத்தப்படுவது தொடர்பிலான இடங்கள் குறித்த இறுதித் தீர்மானங்கள் இக்காலப் பகுதிக்குள் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad