புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013

பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.
வாசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட்,
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரின் முடிவில், அனைத்துலக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக் கூறுவதற்கு ஆதரவளித்தோம்.
நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண  இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 20-02-2013, 11:42.35 AM ]
லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 20-02-2013, 11:23.44 AM ]
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடினார்.
[ Wednesday, 20-02-2013, 10:58.16 AM ]
தெல்லிப்பழை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையதளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன.
[ Wednesday, 20-02-2013, 10:35.07 AM ]
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அரசாங்கம் இராணுவ ரீதியிலான அடக்குமுறையை வடக்கில் முன்னெடுத்து வருவதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
[ Wednesday, 20-02-2013, 10:04.18 AM ]
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது இளைய மகனான 12 வயது பாலகன் பாலச்சந்திரனை மிகக் கோரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை மிகவும் வன்மையான குரலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆறுதல் தரக் கூடியது.
[ Wednesday, 20-02-2013 08:26:50 GMT ]
சிலி நாட்டின் குயிலொன் நகரில் ஒருவரையொருவர் தக்காளிப்பழத்தினால் தாக்கிக்கொள்ளும் War of the Tomato  என்றழைக்கப்படும் விநோதத் திருவிழா நடைபெற்றது.
[ Wednesday, 20-02-2013 07:05:05 GMT ]
சகோதரிகள் மூவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
[ Wednesday, 20-02-2013 07:42:21 GMT ]
தீவிரவாதிகளுக்கெதிரான போரால் பாதிக்கப்பட்டு உள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது அமைதி திரும்பி வருவதையடுத்து அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண அந்நாட்டு அரசு கவனம் செலுத்தி வருகிறது.
[ Wednesday, 20-02-2013 06:15:47 GMT ]
பல்வேறு ஸ்மார்ட்போன்கள் நீங்கள் நம்பமுடியாத வடிவமைப்புடன் வெளிவரப்போவதாக கிசுகிசுக்கள் நாள்தோறும் வெளியாகின்றன.
[ Wednesday, 20-02-2013 11:42:09 GMT ]
கொலிவுட்டில் ஜெயம் படத்தின் மூலம் அண்ணன் ராஜா இயக்குனராகவும், தம்பி ரவி கதாநாயகனாகவும் ஒன்றாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள்.
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
Enter your email address:
[ Monday, 18-02-2013 09:19:23 ]
ஒரு நாட்டின் அதிபர் தனது ஆளுகைக்குட்பட்ட ஒரு பிரதேசத்துக்கு பயணம் செய்யும் போது அந்தப் பகுதி மக்களிடையே பலவிதமான எதிர்பார்ப்புக்கள் எழுவதுண்டு.

ad

ad