புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013


14-வயது மாணவியை திருமணம் செய்த 32-வயது மாப்பிள்ளை : பெற்றோர் கைது
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள், வயது-42. இவரது, மகள் ராணி, வயது-14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் அங்குள்ள ஒரு ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் படிக்கும் மாணவிகளை சில வாலிபர்கள் ராணியை சுற்றிச்சுற்றி வந்து நூல் விட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பயந்து போன பெருமாள் ராணிக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த திருமணம், மோகனூர் சின்னதம்பிபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோவிலில்,  பிப்ரவரி 14ம் தேதி காலை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மணப்பெண் இன்னும் மேஜர் ஆகவில்லை என்பது குறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள், கொமரிபாளையம் கிராமநிர்வாக அலுவலர் மாரப்பனிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து, வி.ஏ.ஓ., மாரப்பன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார், நேற்று காலை, திருமணம் நடக்க இருந்த வீரமாத்தியம்மன் கோவிலுக்குச் சென்றனர்.
அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த வருவதை அறிந்த பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள், அதிகாரிகள் வரு வதற்கு முன்பாகவே, ராணிக்கு திருமணத்தை நடத்தி முடிந்து விட்டனர்.
எனினும், திருமணம் செய்யபப்ட்ட பெண், மைனர் என்பதால், பெண்ணின் தந்தை பெருமாள், அவரது உறவினர் அண்ணாதுரை, வயது-34, திருச்சி மாவட்டம் முருங்கைப்பட்டியை சேர்ந்த புதுமாப்பிள்ளை ராஜேந்திரன், வயது-32, அவரது தந்தை கணேசன், வயது-55,மற்றும் அவரது உறவினர் குமார்,வயது- 22, ஆகிய ஐந்து பேரையும், மோகனூர் போலீஸார் கைது செய்தனர். மைனர் பெண்ணான ராணியை அவர்களிடமிருந்து மீட்டு, நாமக்கல்லில் உள்ள  பெண்கள் பாதுகாப்பு விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்காத காவல்துறையினர், குறைவான வயதில் திருமணம் செய்யும் பெற்றோர்களை எப்படி கைது செய்யலாம் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ad

ad