புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013

நோர்வே சிறுவர் காப்பக விவகாரங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி கூட விருக்கின்ற ஜெனிவா பேரவையில் எதிரெலிக்குத் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
 இந்நிலையில் 2012 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் 2012 ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரையில் நோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட
இலங்கையின் யாழ்பாணத்து தாய்மாரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மதிப்பளிக்காத நோர்வே அரசாங்கமும் டொம் தேவாலய நிர்வாகமும் அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விட்டதாக சம்பந்தப்பட்ட தாய்மார் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தமது கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளனர். 

நோர்வே சிறுவர் காப்பகங்களால் சிறுவர்கள் நடத்தப்படுகின்ற நிலைமைகள் குழந்தைகளை தாயிடமிருந்து அல்லது பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பிரித்து எடுத்துச்செல்கின்ற செயற்பாடுகள் சிறுவர் காப்பகங்களாலும் குந்த்த பெற்றோர் மற்றும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள் நோக்கப்படுகின்ற நிலைமைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் பல்வேறு கேள்விகளை எழும்பியுள்ளன.

அத்துடன் நோர்வே சிறுவர் காப்பக அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா. பேரவையும் தமது கண்டனத்தை வெளியிட்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க இந்தியா, ரஷ்யா, போலந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ள நோர்வே அரசாங்கம் இம்முறை இம் பெறவிருக்கின்ற ஜெனிவா பேரவையின் கூட்டத் தொடரின் போது பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் நோர்வே சிறுவர் காப்பகங்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களின் குழந்கையைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளும் வருடக்கனக்கில் சிக்குண்டிருப்பதால் இலங்கை அரசாங்கம் நிச்சயமா இவ்விடயம் தொடர்பில் ஜெனிவா பேரவையில் கேள்வியெழுப்பும் என்று நம்பப்டுகிறது. அத்துடன் நோர்வேயின் சிறுவர்கள் காப்பகம் சம்பந்தமாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அதனை நோர்வே அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இவ்விடயத்தில் தமது நாட்டின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் இவ்விடயம் சம்பந்தமாக ஜெனிவா பேரவையில் கேள்வியெழுப்பும் பட்சத்தில் விளக்கவிருப்பதாகவும் அங்கிருந்து தகலவ்கள் வெளியாகியுள்ளன.

எது எப்படியோ நோர்வே சிறுவர் விவகாரம் தொடர்பில் ஜெனிவா பேரவையில் பதிலளிக்கும் கட்டாயத் தேவை ஒன்று நோர்வே அரசாங்கத்திற்கு எழுந்துள்ளது.

இந்நிலையில் சிறுவர் காப்பகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலாக சட்டங்களை மாற்றியமைப்பதற்கு நோர்வே அரசாங்கத்திற்கு திட்டம் இருந்தாலும் ஒரு புறம் இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தம்மிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை தம்மிடத்திலோ அல்லது தமது உறவினர்களிடத்திலோ ஒப்படைப்பதற்கு நோர்வே அரசு நடவடிக்கை எடுக்க ஜெனீவாவில் அழுத்தப்பிரயோகிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

ad

ad