புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013



ஈரோடு : கள்ளக்காதலனை திருமணம் செய்ய கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆப்பக்கூடல் நாச்சிமுத்துபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி யமு
னா. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு கோகல் (4) என்ற மகன் உள்ளார்.

சம்பத்தன்று வேலைக்கு சென்ற இவர் திடீர் என்று காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் அவர் கவுந்தப்பாடி செரை யாம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகள் அவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். 
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் கொலையாளிகள் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது காணாமல் போன தனது கணவர் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்டதை அறிந்தும் அவர் பிணமாக கிடந்த இடத்துக்கு யமுனா வரவில்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. 
இதைதொடர்ந்து யமுனாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரது போனுக்கு கொலை நடந்த அன்று யார் பேசினார்கள். அவர்களுக்கும் யமுனாவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடத்தினார்கள். அப்போது யமுனா தனது கள்ளக்காதலன் உள்பட 3பேருடன் சேர்ந்து தனது கணவனை கொலைசெய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. 
இதையொட்டி யமுனா, அவரது கள்ளக்காதலன் சரவணன் (வயது 24) இவரது நண்பர் மோகன்குமார் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் சரவணன் பள்ளிபாளையம் சமயசங்கிலியை சேர்ந்தவர். கொலை செய்யப்பட்ட கார்த்திகேயனின் சின்னம்மா மகன். மோகன் குமார் ஈரோடு ஆர்.என். புதூரில் உள்ள குறிஞ்சி நகரைசேர்ந்தவர் மினி ஆட்டோ டிரைவர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயனை எதற்காக கொலை செய்தனர். எப்படி கொலை செய்தனர்? என்று போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.

ad

ad