புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013


நயினாதீவில் இறங்குதுறை திறப்பு விழாவிற்காக பலத்த பாதுகாப்புடன் காத்திருந்த மக்கள்
நயினாதீவு புதிய இறங்குதுறை திறப்பு விழாவிற்காக 3 மணித்தியாலங்கள் பலத்த பாதுகாப்புடன் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியில் வராதபடி கயிறுகள் கட்டப்பட்ட பகுதிக்குள் மக்கள் தங்க வைக்கப்பட்டதோடு, தேசியக்கொடியையும் மகிந்த வரும் போது அசைக்குமாறு ஏற்பாட்டாளர்களால் தெரித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற யாழ்ப்பாண செய்தியாளர்கள், நாகவிகாரையில் நடைபெற்ற நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, அரச ஊடகங்கள் மற்றும் கொழும்பு ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad