புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013


ஒரிசாவுக்குக் கடத்தப்பட்ட நெல்லை மாணவி : மீட்க விரையும் தனிப்படை

நெல்லை மாவட்டம் கீழகரும்புலியூத்து பகுதியில் வடமாநிலத்தைச் சார்ந்த 4 பேர் தங்கி வேலை பார்த்தனர் கடந்த 25ந் தேதி 4பேரும், சேர்ந்து அப்பகுயில் உள்ள பிளஸ் 2 மாணவியைக் கடத்திச் சென்றனர். மாணவியின் தந்தை புகாரின் பேரில் மில் நிர்வாகத்திடம் போலீஸ் விசாரணை செய்ததில் ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த அவர்களை கோவை புரோக்கர் புருஷோத்தமன் வேலைக்குச் சேர்த்து விட்டர் என்ற விபரம் தெரிய வந்தது.

      
இதையடுத்து கோவை விரைந்த போலீசார் புரோக்கர் புருஷோத்தமனைக் கைது செய்தபோது அந்த 4 பேரும் ஆலங்குளத்திலிருந்து புறப்படும் போது, நாங்கள் வேலையை விட்டு விட்டு ஆந்திரா செல்வதாகச் சொன்னவர்கள், அங்கே எந்த இடம் என்று சொல்லவில்லை. என்றிருக்கிருக்கிறார் புரோக்கர்.

இதனிடையே கடந்த 1ம் தேதி ஒரிசாவிலிருந்து தனது தந்தையிடம் பேசிய அந்த மாணவி, போலீசார் பிடியிலிருக்கும் அந்த புரோக்கரை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறும், பின்னர் தன்னை ஒரிசாவுக்கு வந்து அழைத்துச் செல்லும்படி கூறும் போதே அங்கே அவரின் செல்போனைப்பிடுங்கிய மற்றொரு பெண், புரோக்கரை விடுவித்துவிட்டு உங்கள் பெண்னை அழைத்துச் செல்லுங்கள் என பேசியுள்ளாராம் இதனை மாணவியின் பெற்றோர் போலீசில் தெரிவிக்க தொடர்ந்து அந்த ஒரிசா பெண், புரோக்கரை விட்டு விடக் கோர இதனையடுத்து விஷயத்தின் கடுமையை உணர்ந்த போலீஸ் நிர்வாகம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரின் தலைமையில் மாணவியை மீட்பதற்காக போலீஸ் டீமை, ஒரிசாவுக்கு அணுப்பியுள்ளது.

ad

ad