புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013


சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்களை வழங்கியது யார்?

இந்தநிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பே வழங்கியதாக சனல் 4 ன் பணியாளரும், நோ பயர் சூன் (No Fire Zone)என வெளிவர இருக்கும்
ஆவணப்படத்தின் தயாரிப்பாளருமான கலம் மக்ரே வெளிப்படுத்தியுள்ளார்.ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டுவந்ததில் சனல் 4 தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது எனபது பலருக்கு தெரியாமலே இருந்து வந்தது.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதற்கான போராட்டத்தில் இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பின் பணி முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad