புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


 லாஸ்ட் புல்லட்!

அறிஞர் அண்ணாவின் 44-வது நினைவுநாளையொட்டி பிப்ரவரி 3-ந் தேதியன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இத்தனை ஆண்டு களில் ஓராண்டுகூட தவறாமல் பேரணியில் கலந்துகொள்ளும் கலைஞர், இந்த முறையும் கலந்துகொண்டார். திரண்டு வந்திருந்த தொண்டர்கள், தலைவர் முகம் ரொம்ப டல்லாக இருக்கிறது என்று பேசிக்கொண்டனர்.

விஸ்வரூபம் தொடர்பாக கோட்டை யில் பேட்டி கொடுத்த ஜெ., தனக்கும் ஜெயா டி.வி.க்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொன்னார். ஜெயா டி.வியின் எம்.டி பிரபா சிவக்குமாரின் முகவரியும் ஜெ.வின் இல்ல முகவரியும் 36, போயஸ் கார்டன் என்றே பதிவாகியிருப்பதை கண்டறிந்து வெளியிட்டிருக்கிறது முரசொலி. 

வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலரின் நீண்டகாலப் போராட்டத்தினால் சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் உரு வாக்கப்பட்டது. இதனை அப்போதிருந்தே பொறுத்துக்கொள்ள முடியாமல் இருந்த னர் கேரள மாநிலத்தின் ரயில்வே அதிகாரி களும் அரசியல்வாதிகளும். இந்த கோட் டத்தை கேரளாவுக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்படுவதால் அதை எதிர்த்து திராவிடர் கழகம் உள்பட பல அமைப்பு களும் களம் காணத் தயாராகி வருகின்றன.  

டெசோ அமைப்பின் கூட்டம் பிப்ரவரி 4-ந் தேதி அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில்  நடந்தது. கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீ உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில், இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் இந்திய வருகையைக் கண்டிக் கும் விதத்தில் வரும் 8-ந் தேதி சென்னையில் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, மார்ச் மாதத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் டெசோ கருத்தரங்கத்தை டெல்லியில் நடத்துவது, ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமைக்காக ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசை வலியுறுத்து வது, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலைக் கண்டித்து 18-ந்தேதி ராமேஸ்வரத்திலும் 19-ந்தேதி நாகப்பட்டினத் திலும் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலை மாணவர்களின் விடுதலை, கதி என்னவென்று தெரியாத விடுதலைப்புலி  அமைப்பினரின் நிலை இவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ம.தி.மு.க பொதுக்குழு தாயகத்தில் 4-ந் தேதி நடந்தபோது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் இதர கட்சிகளுடனான கூட்டணி வாய்ப்புகள் பற்றியும் ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர். அப்போது வைகோ, கூட்டணி பற்றி நான் முடிவு செய்துகொள்கிறேன் என்றார். பொதுக்குழு முடிந்து பேட்டியளித்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசை விமர்சித்ததுடன், காவிரி விவசாயிகள் பிரச்சினைக்காக ஜெ. அரசைப் பற்றியும் விமர்சித்தார் வைகோ.

ad

ad