புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2013


ஜோர்தானில் துன்புறுத்தலுக்கு இலக்காகிய 47 இலங்கைப் பெண்கள் நாடுகடத்தப்பட்டனர்
ஜோர்தானில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி, தடுப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கைப் பணிப்பெண்கள் 47 பேர் இன்று நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகத்திலே இவர்கள் தடுப்பு முகாமிலே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad