புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013

நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது இங்கிலாந்து
நியூசிலாந்துக்கெதிரான மகளிர் உலகக் கிண்ண தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மூன்றாவது இடம் பிடித்தது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) சார்பில் மகளிருக்கான 10வது உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது.
மும்பையில் நடக்கும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு பிரான்சிஸ் மெக்கே 30 ஓட்டங்களும், பேட்ஸ் 21 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்த களமிறங்கிய சோபி 8 ஓட்டங்களும், சாரா 1 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் நம்பிக்கையுடன் போராடிய அமி சாட்டர்வெயிட் அரைசதம் கடந்து 85 ஓட்டங்கள் எடுத்தார்.கேட்டி 20 ஓட்டங்களும், நிக்கோல் பிரவுனி ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களும் எடுக்க நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ஓட்டங்கள் எடுத்தது.
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 47 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 222 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவிர, உலகக் கிண்ண தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
சாரா டெய்லர் 28 ஓட்டங்களும், கிரீன்வே 31 ஓட்டங்களும், பிரின்டில் 27 ஓட்டங்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவி எட்வர்ட்ஸ் ஆட்டமிழக்காமல் சதம் கடந்து 108 ஓட்டங்களும் எடுத்தனர்.

ad

ad