புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013


பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றம்: ஜெயலலிதா கண்டனம்

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றம்: ஜெயலலிதா கண்டனம

இலங்கை அரசை கண்டித்து மார்ச் 4ல் அதிமுக சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

இன்று (20) செய்தியாளர்களிடம் ‌பேசிய அவர் கூறியதாவது: 

பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளது மனித தன்மையற்ற செயல்; மனதையும் ரத்தத்தையும் உறைய வைக்கும் விதமாக இலங்கை ராணுவம், அப்பாவி தமிழ் மக்களை கொடூரமாக கொலை செய்தது, இலங்கையில் ஹிட்லர் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது. 

இந்திய ராணுவம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆதாரங்களுடன் வீடியோ வெளியிடப்பட்ட பின்னரும் மத்திய அரசு மவுனம் காப்பது முறையல்ல; இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்வாக ஐ.நா.,வுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இலங்கை தமிழர்கள் அங்கு முழுமையான குடியுரிமைகளை வாழ்வாதாரங்களை பெறும் வரை இலங்கை மீதான பொருளாதார தடையை நீடிக்க வேண்டும். 

இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு, அமெரிக்காவுடனும் இன்னும் ஒத்த கருத்துடைய நாடுகளுடனும் கலந்து பேசி, இலங்கையில் நடந்த இனப் படுகொலை தொடர்பாக ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். 

அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டும். 

இலங்கையில் இடம் பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்களது சொந்த இடங்களில் வாழ அனுமதிக்கப்படும் வரை, அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக மரியாதையுடன் வாழும் வரை இந்தப் பொருளாதாரத் தடை நீடிக்க வேண்டும். 

சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத போர்க் குற்றமாகும். இது தொடர்பாக இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தச் செய்ய சர்வதேச நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா. 

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

ad

ad