புதன், பிப்ரவரி 27, 2013

மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் 73-வது பிறந்த நாள் விழா: மார்ச் 1 முதல் 3 நாள் கொண்டாட்டம்
மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 73-வது பிறந்த நாள் விழாவை செவ்வாடை பக்தர்கள் மார்ச் 1, 2, 3
தேதிகளில் கலச விளக்கு வேள்வி பூஜை, கலை நிகழ்ச்சிகள், மக்கள் நலப் பணிகள் முதலிய நிகழ்ச்சிகளோடு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மார்ச் 3-ந்தேதி காலை முதல் பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அருள் தரிசனம் கொடுத்து ஆசி வழங்குகிறார். மார்ச் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று விடியற்காலை 3.30 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. 

காலை 4 மணிக்கு கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் தொடர்ந்து காலை 8 மணிக்கு அடிகளாருக்கு பாத பூஜையுடன் பக்தர்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். மாலை 2.30 மணிக்கு பல மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படும் ஆன்மிக ஜோதிகளை ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப. செந்தில்குமார் வரவேற்கிறார். 

தொடர்ந்து நடைபெறும் கலசவிளக்கு வேள்வி பூஜையை இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவிரமேஷ் துவக்கி வைத்து பங்கேற்கிறார். மார்ச் 2 (சனிக்கிழமை) காலை ஆன்மிக குரு அடி களாரை தங்கரதத்தில் ஏற்றி பக்தர்கள் அழைத்து வருகிறார்கள். அன்று மாலை 5.30 மணி அளவில் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க அரங்கில் மக்கள் நலப்பணி விழா நடை பெறுகிறது. 

விழா மலரை அருள்திரு அடிகளார் வெளியிட தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் நீதிபதி எம்.தணிகாசலம் பெற்றுக் கொள்கிறார். ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் சிறப்பு பேரூரை ஆற்றுகிறார். மார்ச் 3 ஞாயிறு காலை ஆன்மிக குருவை அலங்காரரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். காலை சுமார் 8 மணி முதல் சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் அமர்ந்து பக்தர்களுக்க அடிகளார் அருள்தரிசனம் கொடுத்து ஆசி வழங்குகிறார். 

விழா ஏற்பாடுகளை ஆன்மீக இயக்கமும், சேலம், நாமக்கல் மாவட்ட கிளை இயக்கங்களும், பல்வேறு ஆன்மீக குழுக்களும் இணைந்து சிறப்பாகச் செய்து வருகிறார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.