புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2013


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு முறுகல் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒருக்கட்டமாக, இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர் ஏ எச் எம் பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். 
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமி;த்தமையை அடுத்தே இந்த தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் ஒருக்கட்டமாக, இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர் ஏ எச் எம் பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
ஏற்கனவே பௌசி, கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளராக செயற்படுகிறார். எனினும் அதில் பாதியை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு வழங்கியமையை ஆட்சேபித்தே அவர் கட்சியின் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
தாம், தேவையில்லையென்றால் அதனை நேரடியாக கூறலாம். அதனை விடுத்து தேர்தல் தொகுதியில் பாதியை மாத்திரம் தமக்கு பொறுப்புத் தருவதை தாம் ஏற்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மத்திய தொகுதியில் ஏற்கனவே முஸ்லிமாகிய தாம் அமைப்பாளராக செயற்படும் போது அங்கு சிங்கள தமிழ் வாக்காளர்களை கவர சிங்களம் அல்லது தமிழ் அமைப்பாளர் ஒருவரை நியமித்திருக்கலாம்.
அதனைவிடுத்து ஏன் மற்றும் ஒரு முஸ்லிமான பைசர் நியமிக்கப்பட்டார் என்று பௌசி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் அவருடைய எதிர்ப்புக்கு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பதில் கிடைக்கவில்லை.
இந்தநிலையி;ல் தொகுதி அமைப்பாளர் நியமனங்கள் யாவும் ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டவை. அதில் தமக்கு சம்பந்தமில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ad

ad