புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013


யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யை ஏளனம் செய்த டக்ளஸ் மற்றும் ஆளுநர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்து பேச்சே எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் காத்திருந்த நிலையில், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் குறித்து பேச ஆரம்பித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை ஏளனம் செய்யும் வகையில் ஆளுநரும், அமைச்சர் டக்ளசும் நடந்துகொண்டனர்.
ஜனாதிபதி தலைமையில் இன்று மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதன்போது மீள்குடியேற்றம் தொடர்பில் ஒரு பக்கத்தில் விளக்கமளித்த மாவட்ட அரசாங்க அதிபர் அதற்குப் பின்னர் வாய் திறக்காமல் அமைதியாக இருந்து விட்டார்.
இந்நிலையில் வ லி வடக்கில் சுமார் 24 கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 29ஆயிரம் மக்கள், மீள்குடியேற்றப்படாமலிருப்பது தொடர்பிலும், அவர்களை விரைவுபடுத்தி மீள்குடியேற்றுங்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தரவுகளுடன் கோரிக்கையொன்றை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
எனினும் அதனை ஏளனமான சிரிப்புடன் வாங்கிய ஜனாதிபதி, தரவுகள் சரியாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டே அதை இராணுவத்தளபதி ஹத்துருசிங்கவிடம் கொடுத்து விட்டார்.
இந்த ஹத்துருசிங்கவே உயர்பாதுகாப்பு வலயப்பகுதி இராணுவத்திற்கே சொந்தமானது என பகிரங்கமாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கையினை முன்வைக்க முனைந்தபோது அமைச்சர் டக்ளசும், ஆளுநரும் குறுக்கிட்டு தேவையில்லாமல் பேசிக்கொண்டிருந்தனர்.
எனினும் அத்தனையினையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கையினை ஜனாதிபதியிடம் வழங்கினார். அதனை ஜனாதிபதி ஏளனமாக சிரித்துக் கொண்டே வாங்கினார்.

ad

ad