புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013

தென்காசி:தென்காசியில் நடந்த மதிமுக பிரமுகர் நிஜாம் இல்லத் திருமண விழாவில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நிஜாம் இல்லத் திருமணம் தென்காசி இசக்கி மகாலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.
மா.கம்யூ., மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இ.கம்யூ., மாநில துணைச் செயலாளர் பழனிச்சாமி,மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார்.

மணமக்களை வாழ்த்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-
தற்போது தமிழகத்தில் அதிமுகவினர் வீட்டின் இல்ல நிகழ்ச்சிகளில் திமுகவினரோ, திமுகவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிகளில் அதிமுகவினரோ கூட பங்கேற்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால் மதிமுகவில் அந்த நிலை இல்லை என்பதற்கு எடுத்து காட்டாகத்தான் இந்த நிஜாம் இல்லத் திருமண விழாவில் அனைத்து கட்சியினரும் பாகுபாடின்றி ஒன்றாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.மற்ற கட்சியினருக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மதுவின் போதையில் இருண்டு காணப்படும் தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக தமிழக அரசை வலியுறுத்தி இன்று (18ம் தேதி) மாமல்லபுரம் கோவளத்திலிருந்து நடை பயணம் துவங்குகிறது. இதில் நெடுமாறன், மமக ஹைதர்அலி பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர்.மத்திய அரசு கொலைகார அரசாக விளங்குகிறது. சட்டத்தை மதிக்க வேண்டிய அரசே காலில் போட்டு மிதிக்கிறது.

இதனை கேட்டதற்காக என் மீது தேச விரோத வழக்கு போடப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் தமிழகம் பாதுகாப்பாக விளங்க ஊழலற்ற அரசு அமைய ஜனநாயக ரீதியில் போராடி வருகிறோம்.வீரப்பன் வழக்கில் 121பேர் கைது செய்யப்பட்டனர். 116 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மீதமுள்ள ஞானப்பிரகாசம், மைசன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தூக்கு தண்டனையை 90 சதவீத நாடுகள் எதிர்க்கின்றன. இது மனித உரிமை மீறல் பிரச்சனை. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தென்காசி எம்பி., லிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நசீர், கமருதீன், விடுதலை சிறுத்தைகள் வன்னியஅரசு, தொழிலதிபர் முகம்மது இஸ்மாயில், உலமாக்கள் சபை முகம்மது லியாகத்அலி, பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார், மில்லர் முகம்மது இஸ்மாயில், இமயம் ஜெபராஜ் ஆகியோர் வாழ்த்து வழங்கினர். மதிமுக ஆலோசனைக்குழு உறுப்பினர் நிஜாம், பொதுக்குழு உறுப்பினர் ஆயிரப்பேரி முத்துசாமி, நகர செயலாளர்கள் வெங்கடேஸ்வரன், சங்கர நாராயணன், ஒன்றிய செயலாளர் குட்டீஸ்வரன், பண்டார முதலியார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.
(நன்றி : தினமலர் நாளிதழ்)

ad

ad