புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013

ஒரு சுவாரஸ்மான கட்டுரை படித்து ரசியுங்கள் 
தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. கேவலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும்நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும்.

கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்… குடும்பத்தை குழப்பினேன்.என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை. நிச்சயமாக இல்லை. கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்…. கட்சியே கூடாது என்பதற்காக அல்ல… கட்சியிலே வேறு யாருமே தலைவராகக் கூடாது என்பதற்காக. குடும்பத்தை குழப்பினேன். குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக அல்ல… என் குடும்பத்திலிருந்தே எனக்குப் போட்டியாக தலைவர்கள் உருவாவதைக் கண்டிப்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை… உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக சாக்கடையில் உழன்று சாக்கடையோடு சாக்கடையாக மாறுமே பன்றி… – அதைப் போல.

என்னைக் கேடுகெட்டவன் கேடுகெட்டவன் என்கிறார்களே… இந்த கேடுகெட்டவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கேவலங்கள் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்… பல குட்டி போடும் பன்றிகள் இருந்திருக்கின்றன…. கடவுளைக் கண்டதில்லை.. ஆனால் பல கயவாளிகளைக் கண்டிருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை… நீதிபதி அவர்களே… தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
திருவாரூரிலே
தமிழ்நாட்டிலே ன்னை. தமிழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கு பிடிக்க வந்த சனியல்லவா நான்.. சென்னை அது என்னை வளர்த்தது. திருடக் கற்றுக் கொடுத்தது- திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்தவரை கண்டேன். திராவிடம் என்னும் மாயையை கற்று தமிழகத்தையே கொள்ளையடிக்கலாமென்று திட்டமிட்டேன். அப்படிக் கொள்ளையடிக்க கிளம்பியவர்களுள் நானும் ஒருவன். பணத்தைக் கொள்ளையடித்தேன்… நாட்டைக் கொள்ளையடித்தேன்… கடைசியில் கயவனாகவே மாறினேன்.

கண்டேன் குஷ்புவை. தமிழ்ப்பண்பாட்டுப் பதுமையாக… ஆம் அழகுப் பதுமையாக. பதுமையின் பெயரோ குஷ்பு. மங்களகரமான தெய்வத்திருப்பெயர். கழுத்தில் மாங்கல்யம் இருந்தது. இருந்தால் எனக்கென்ன… தமிழ்நாட்டின் கனவுக்கன்னி அரசியல் கனவுகளோடு காத்திருந்தார். எப்படியாவது திமுகவைக் கைப்பற்றி விடலாமா என்று துடித்தார். அலைந்தார்… குஷ்புவுக்காக நான் அலைந்தேன்.

குஷ்புவுக்காக கருணை காட்டினர் பலர். அவர்களிலே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் ஒன்று. எப்படியாவது அவளை அக்கட்சியில் சேர்த்து விடலாம் என்று துடித்தனர். இன்று சஸ்பென்ட் ஆகி ராமநாதபுரத்தில் இருக்கிறானே ஜாபர் சேட்… அவன் தன் சாகசத்தால் குஷ்புவை கட்சிக்கு அழைத்து வந்தான். அவன் அழைத்து வராவிட்டால் நான் என்றைக்கோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.

குஷ்பு கட்சிக்கு வந்ததும் கழகமே ஆர்ப்பரித்தது. திமுக புதிய பிரவாகமாக பொங்கியெழுந்தது. உலக மாதாவின் பெயரால் குஷ்புவைக் கட்சி ஏற்றுக் கொண்டது. கட்சியில் உயர்ந்த இடத்துக்கு வந்தார் குஷ்பு. நேற்று முளைத்தவர்கள் கட்சியைக் கைப்பற்றுவது இல் உலகத்தில் நடக்காத விந்தையல்ல. ஆந்திர தேவுடு என்.டி.ஆர்.. சுயசரிதை எழுத வந்த லட்சுமி சிவபார்வதியிடம் கட்சியை ஒப்படைக்கவில்லையா… அந்த முறையைத்தான் கையாள இருக்கிறாள் குஷ்பு… இது எப்படி குற்றமாகும் ?

குஷ்பு நினைத்திருந்தால் பொதுச்செயலாளர் பதவியிலே ஒரு நாள்… அவள் விரும்பியிருந்தால் பொருளாளர் பதவியேலே ஒரு நாள்… இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை… இதைத்தானா இந்தத் தமிழகம் விரும்புகிறது… ?

கோபாலபுரம் குஷ்புவை விரட்டியது… பயந்து ஓடினாள். சிஐடி காலனி குஷ்புவை விரட்டியது மீண்டும் ஓடினாள். மதுரை குஷ்புவை விரட்டியது ஓடினாள்… ஓடினாள்… கட்சியை விட்டு ட்விட்டருக்கு ஓடினாள்.. அவள் ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் இன்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதுவோர்…. செய்தார்களா… வாழ விட்டார்களா குஷ்புவை… ?

ஸ்டாலின் : அப்பா யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்..

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

தட்சிணாமூர்த்தி: யார் வழக்கிற்குமில்லை. இதுவும் என் வழக்குதான். குஷ்புவின் வழக்கு. ஒரு மறத்தமிழச்சியின் வழக்கு. திராவிட இனத்தின் கலங்கரை விளக்கு. அந்த கலங்கரை விளக்கை கலைக்க எண்ணும் கயவர்களை எதிர்க்க கலங்கரை விளக்கின் காவலன் ஓடுவதில் என்ன தவறு ? குஷ்பு இன்று கண்ணீர் சிந்துவது ஒரு குற்றம். ட்விட்டரில் தினமும் புலம்புவது ஒரு குற்றம், அவளை கட்சியினரே தூற்றுவது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம் ?

கட்சியின் குற்றமா ?

அல்லது கட்சியின் பொருளாளராக இருக்கும் என் மகனின் குற்றமா ?

குமுதத்தில் இப்படி ஒரு கட்டுரை வந்தது யார் குற்றம் ?

பெரியாரின் குற்றமா ?

அல்லது பெரியாரைத் திருமணம் செய்து திராவிடர் கழகத்தையே உடைத்த மணியம்மையின் குற்றமா ?

திமுகவிலே இன்று சலசலப்பு தோன்றியுள்ளது யார் குற்றம் ?

நேற்று வந்த குஷ்புவை அன்பழகன் இறந்தபிறகு பொதுச்செயலாளர் ஆக்கத் திட்டமிட்ட என் குற்றமா ? அல்லது

இன்னும் இறக்காமல் இருப்பவர் உயிரை எடுக்கும் அன்பழகனின் குற்றமா ?

திராவிட இயக்கத்தின் குலக்கொழுந்தைக் கண்ணீர் சிந்த விட்டது யார் குற்றம் ?

கட்சித் தலைவரான என் குற்றமா ?

அல்லது தமிழினத்தலைவன் என்ற பெயரால் காமலீலைகள் நடத்தும் போலித் தமிழினத் தலைவனான என் குற்றமா ?

இந்தக் குற்றங்கள் களையப்படும் வரை தட்சிணாமூர்த்திகளும், குஷ்புக்களும் குறையப்போவதில்லை. இதுதான் திராவிட இயக்கத்தின் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கத்தைப் புரட்டினாலும் காணப்படும், அவலம்… கேவலம்… கிரிவலம்…

நன்றி : வாசு சங்கராபிள்ளை

ad

ad