புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2013



ஆசிரியையின் முடியை பிடித்து இழுத்த மாணவன்

சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் சோலையப்பன். அந்த பகுதியில் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் பெயிண்டர் வேலை செய்துவருகிறார். இவரது மகன் விஜயகுமார் (வயது-16). இவர் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

      
நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் விஜயகுமார் அந்த பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியையின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார்.

இதையடுத்து அந்த ஆசிரியை தலைமை ஆசிரியர் எழில்மணியிடம் மாணவர் விஜயகுமார் பற்றி புகார் கூறினார். மாணவர் விஜயகுமாரை கூப்பிட்டு விசாரனை நடத்திய தலைமையாசிரியர் நாளை உனது தந்தையை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வா என்று கூறி மாணவன் விஜயகுமாரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த மாணவர் விஜயகுமார் கட்டிலில் படுத்துகொண்டு வாந்திஎடுத்துளார். எண் என்று கேட்ட அவனது அம்மாவிடம், தன்னை தலைமை ஆசிரியர் திட்டியதால் தான் சாணி பவுடரை கரைத்து குடித்ததாக கூறியுள்ளார்.

இதனால் பயந்து போன பெற்றோர்கள் நேற்று மதியம் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர் விஜயகுமாரை சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தபோது, அவர் சாணி பவுடர் குடிக்கவில்லை என்று தெரிந்தது. பின்னர் அவரை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இதே போல் மாணவர் விஜயகுமாரை அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு திட்டியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த மாணவர் விஜயகுமார் கடந்த 24-ந் தேதி பெயிண்டர் அடிக்க பயன்படும் தின்னரை எடுத்து குடித்து உள்ளார். மேலும் இவர் 10-ம் வகுப்பு படிக்கும் போது பெனாயில் குடித்து இருக்கிறார். இது குறித்து கல்வி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ad

ad