புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013


சிவில் விடயங்களில் இராணுவம் தலையீடு; சுவிட்சர்லாந்து பிரதிநிதிகளிடம் சரவனபவன் எம்.பி குற்றச்சாட்டு
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் இன்னும் முற்றுமுழுதாக வழங்கப்படவில்லை.அத்துடன் இராணுவத்தினருடைய நெருக்குவாரங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனை முடிவுக்குக் கொண்டுவரவதுடன் மக்களது உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் குழு ஒன்று இன்றைய தினம் உதயன் பத்திரிகை நிறுவனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் ஆகியோரைச் சந்தித்தனர் அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் முற்றுமுழுதாக வழங்கப்படவில்லை.

அத்துடன் தற்போதும் இராணுவத்தினரின் நெருக்குவாரமும் தொடர்ந்து தமிழர் வாழும் பகுதிகளில் காணப்படுவதுடன் பொதுமக்களுடைய காணிகளும் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன.

மேலும் எமது மக்கள் இன்னும் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படாது முகாம்களில் உதவிகள் எதுவும் அற்ற நிலையில் உள்ளனர். எனவே இவர்களை சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

அத்துடன் சிவில் விடயங்களில் இராணுவத்தினருடைய தலையீடும் அதிகமாக காணப்படுகின்றது. எனவே இவற்றினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

இதேவேளை, போர் ஓய்ந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு முக்கியமானது. அத்துடன் அந்தந்தப் பிரதேசங்களை ஆளும் உரிமை என்பதனைக் கருதி மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாட்டில் சமாதானமும் பொருளாதாரமும் மேம்படும்.

எனவே இவை அனைத்தும் மேம்படுவதற்கு அரசு முயற்சி எடுக்கவேண்டும் அதற்கு தமிழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலான சுவிட்சர்லாந்தில் இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் கிடையாது எனவும் சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.






ad

ad