புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013


ஐதேக, ஜமமு, நவ சமசமாஜ கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு உடன்படிக்கை! த.தே.கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை
எதிர்க்கட்சிகள் தமக்கிடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று எதிரணி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கட்சியிலிருந்து வெளியேறும் அங்கத்தவருக்கு இன்னொரு பங்காளி கட்சி தமது அங்கத்துவத்துவத்தை வழங்க முடியாது. பங்காளி கட்சிகளின் தலைவர்களை விமர்சனம் செய்ய முடியாது.
இது தேர்தல் கூட்டணி கிடையாது. ஆனால், இந்த எதிர்க்கட்சி இயக்கத்தில் இடம்பெறும் எந்த கட்சிகளும் தமக்கிடையே தேர்தல் உடன்பாடு கொள்ளலாம், உட்பட தமக்கிடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பில் பல்வேறு விதிமுறைகளை கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று எதிரணி கூட்டமைப்பு தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, மெளபிம ஜனதா கட்சி, ருஹுனு ஜனதா கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் சுதந்திரத்திற்கான மேடை என்ற சிவில் அமைப்பும் தமக்கிடையே நல்லுறவுகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கையெழுத்திட்டுள்ளன.
இந்த கையெழுத்திடும் வைபவம் இன்று பிற்பகல் கொழும்பு புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், நவ சமசமாஜ கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஹேமகுமார நாணயக்கார, அருண சொய்சா, சிறிமாசிறி பெரேரா, சுதர்ஷன குணவர்த்தன மற்றும் கூட்டமைப்பின் எம்பி சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த உடன்படிக்கையில் கையெழுத்ததிடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், கூட்டமைப்பு தலைவர் நாட்டில் இல்லாத காரணத்தால், இது சம்பந்தமாக கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுடன் பிறிதொரு தினத்தில் தமது கட்சி கையெழுத்திடும் என கூட்டமைப்பு எம்பி சுமந்திரன், உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அதேபோல் ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் நாட்டில் இல்லாத காரணத்தால், இக்கட்சியும் பிரித்தொரு தினத்தில் கையெழுத்திடும் என அறிவிக்கப்பட்டது. ஏனைய கட்சி தலைவர்கள் கையெழுத்திட்ட இந்த எதிரணி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், எதிரணி கட்சிகள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் பின்வரும் பல்வேறு ஷரத்துகள் இடம்பெறுகின்றன.
இதன்படி இனி, எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கட்சியினதும் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தின் அனைத்து கட்சிகளும் மதிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் இந்த எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தின் எந்த ஒரு கட்சிகளிருந்தும்  வெளியேறும் எந்த ஒரு அங்கத்தவருக்கும் எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் இன்னொரு பங்காளி கட்சி தமது அங்கத்துவத்துவத்தை வழங்க முடியாது.
இந்த எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் கட்சிகள், பிற பங்காளி கட்சிகளின் தலைவர்களை விமர்சனம் செய்ய முடியாது. இந்த உடன்படிக்கை தேர்தல் உடன்படிக்கை அல்ல. ஆனால் எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் மத்தியில் தேர்தல் நோக்கில் கூட்டணிகள் உருவாவதை எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கம் அங்கீகரிக்கின்றது.

ad

ad