புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2013

குஸ்பு எங்கே தேடும் குரல்கள் 


 ந்த கல்வீச்சும் முற்றுகையும் நடந்த அதே நாள் (பிப்.7) மாலை யில்தான், அதே திருச்சியில் தி.மு.க தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கலைஞரின் பேச்சைக் கேட்க பெருங்கூட்டம். கூட்ட ஏற்பாட் டாளர்கள்-நிர்வாகிகளின் பெயரைக் கலைஞர் உச்சரித்துவிட்டு வழக்கம்போல், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று சொன்னபோது, கைதட்டல் அதிர்ந்தது. இந்த சொல்லைக் கேட்டதும், உயிரிலும் உணர்விலும் புது உற்சாகம் பெறும் தொண்டர்கள் பலர், தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்கான வாகனங்களைப் பிடிக்க விரைவது வழக்கம். அது போல, திருச்சி பொதுக்கூட்டத்திலும் கலைஞரின் வார்த்தையைக் கேட்டதும் புறப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், 60 வயதைக் கடந்த சீனியர் கட்சிக்காரர்கள்.

""நாங்க கிட்டதட்ட 50 வருசமா இந்த வார்த்தையைக் கேட்கிறோம். இந்த  ஒரு வார்த்தைதான் எங்க உசுரை வளர்த்துக்கிட்டிருக்கு. கட்சிக்கு என்ன ஏற்ற இறக்கம் வந்தாலும் நாங்க உறுதியா உழைப்போம். அவ்வளவு தான்''’என்றபடி வாகனங்களைப் பிடிக்க விரைந்தனர். உள்கட்சி விவகாரங் களால் அவர்களுக்கு கொஞ்சம் அதிருப்தி இருந்தாலும், அதையும் மீறி அவர்களை இயங்க வைக்கிறது கலைஞரின் சொல்லும், தி.மு.க மீதான பற்றும். 

இதுபோல எத்தனை பேர் புரிந்து நடந்துகொள்கிறார்கள் எனக் கேட்கிறார்கள், குஷ்பு சர்ச்சையின் பின்னணி மற்றும் தாக்குதல் தொடர்பாக நக்கீரனில் வெளியான அட்டைப்படக் கட்டுரையை முழுமையாகப் படித்த தி.மு.க நிர்வாகிகள். தன்னுடைய பேட்டியும் அது தொடர்பான சர்ச்சைகளும் பற்றி அறிக்கை வெளியிட்ட குஷ்பு, ""என்னுடைய பேட்டி வெளியிடப்பட்ட முறையால், கட்சித் தோழர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. தலைமை முன்மொழிவதை எப்போதும் நான் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதைக் கடமையாகக் கொண்டிருக் கிறேன். நான் தளபதியை பெரிதும் மதிப்பவள். என் வீட்டில் தலைவர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஃபோட்டோ மட்டுமே உள்ளது. என் பேட்டியை தொண்டர்கள் தவறாகப் புரிந்து கொண்டு தாக்குதல் நடத்தியது வருத்தமாக உள்ளது'' எனத் தெரிவித்திருந்தார்.

குஷ்புவின் அறிக்கையைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலையில் தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து ஓர் அறிக்கை வெளியானது. அதில், ""குஷ்பு அளித்த பேட்டியை விஷமத்தன மானத் தலைப்பிட்டு வெளியிட்டதையொட்டி, பல்வேறு அறிக்கைகள் தி.மு.க. முன்னணியினரால் வெளியிடப்பட்டன. குஷ்புவின் விளக்கம் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக உள்ளது. என்றாலும், தன்னிச்சையாக கருத்துகளை வெளியிடுவோர் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவார்கள்'' என எச்சரிக்கப்பட்டிருந்தது. 


இந்த அறிக்கையை வெளியிட்ட மாலை நாளேடுகளில், தி.மு.க.விலிருந்து குஷ்பு வெளியேற்றம் என்ற யூகச் செய்திகள் வெளியாகவே, தலைமைக் கழகம் பதறிப்போய் மீண்டும் ஓர் அறிக்கையை வெள்ளி இரவில் வெளியிட்டது. "குஷ்பு வெளியேற் றம் என்பது பொய்ச் செய்தி' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்த துடன், "குஷ்பு மீதும் அவரது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது கட்சியின் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குஷ்பு விவகாரம் இன்றளவிலும் தி.மு.க. வட்டாரத்தில் சீரியஸாகவே விவாதிக்கப்படுகிறது. ""இந்தளவுக்கு சிக்கலை உண்டாக்குற மாதிரி அந்தம்மா பேட்டி கொடுத்தது தப்பு. அவங்க அப்படி சொன்னாங்களா, திரித்து வெளியிட்டுட்டாங்களான்னு தெரிஞ்சுக்காம அவங்க மேலே செருப்பு வீசுனதும், அவங்க குழந்தைங்க இருந்த வீட்டைத் தாக்குனதும் அதைவிட தப்பு. ஆளுங்கட்சியான அ.தி.மு.க எம்.பி தேர்தலுக்கு வேகமா ரெடியாகிக்கொண்டிருக்குது. நம்ம கட்சியிலே இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் மக்கள் எப்படி ரசிப்பாங்க? ஆளுங்கட்சிக்கு எதிரான கடுமையான மனநிலை மக்கள்கிட்டே இருக்கிறப்ப, அதை நமக்கு சாதகமா மாத்த வேண்டிய நேரத்தில், இதுபோன்ற சர்ச்சைகள் நம்ம வெற்றியை திசை திருப்பிடுமோன்னு பயமா இருக்கு. இந்தப் பிரச்சினை எப்ப ஒரு முடிவுக்கு வரும்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்'' என்கின்றனர்.

தி.மு.க.வில் ஸ்டாலின் ஆதரவாளர்களான டி.ஆர்.பாலு, கே.என்.நேரு போன்றவர்கள் அந்த பேட்டி வெளியான நாளிலேயே டென்ஷனாகி, இதை சும்மா விடக்கூடாது என ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள். அவரோ, ""சும்மா இருங்க... இதை பெரிய பிரச்சினையாக்காதீங்க. அது வேறு மாதிரி போயிடும்'' என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, திருச்சி சிவா இல்லத் திருமணத்திற்கு வந்தார். திருமண மேடையில் குஷ்புவை பேச அனுமதித்ததும், ஸ்டாலினும் அவர் மனைவியும் பலத்த அப்செட். உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்'' என்கிற லோக்கல் நிர்வாகிகள், ""எங்க மாவட்டம்தான் தளபதிகிட்டே பேசி, சாயங்காலம் நடக்கிற பொதுக்கூட்டத்துல நீங்க கலந்துக்கணும்னு சொல்லி சம்மதிக்க வச்சாரு. இல்லைன்னா, பொதுக்கூட்டத்துக்கு தளபதி வராமல் போய் அதுவும் ஒரு சர்ச்சையாகியிருக்கும்'' என்கின்றனர். சர்ச்சைக்குரிய பேட்டி கொடுத்த குஷ்புவிடம் தி.மு.க தலைமை எந்தவித விளக்கமும் கேட்காமல், நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அந்த பேட்டியால் டென்ஷனாகி தாக்குதல் நடத்தியவர் களை காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்ச ரித்திருப்பது ஏன் என்று கட்சியின் ஒரு தரப்பினரிடம் கோபமும் ஆதங்கமும் உள்ளது. 

தலைமையோ, "ஜனநாயகப்பூர்வமான இயக்கம் என்று தி.மு.க. பற்றி பேட்டி கொடுத்திருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? காட்டு மிராண் டித்தனமானத் தாக்குதலுக்குத்தானே நடவடிக்கை எடுக்க முடியும்' என்கிறதாம். குஷ்புவும் இந்த தாக்கு தல் விவகாரத்தை விடுவதாக இல்லை என்கிறது அவரது தரப்பு. மனதளவில் மிகுந்த பாதிப்பும் அதிர்ச்சியும் அடைந்திருக்கும் அவர், திருச்சியி லிருந்து சென்னை திரும்பியதும் ஏர்போர்ட்டிற்கே தன் பெண் பிள்ளைகளை வரச்சொல்லி, அவர்களை ஆறுதல்படுத்தி அழைத்துக்கொண்டு ஹைதராபாத் சென்றுவிட்டார். அங்கே கணவர் சுந்தர்.சியுடன் அடுத்த கட்டம்பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார். 

குஷ்புவை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்ட தி.மு.க. தலைமை, இது தொடர்பாக அவரிடம் பேசும்படி சிலரிடம் அசைன்மென்ட் கொடுத்தது. சம்பந்தப்பட்டவர்கள் தகவல் பாஸ் செய்யவில்லை. 

அ.தி.மு.க. தலைமையோ, குஷ்புவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை தொடங்கியிருக்   கிறது. குஷ்புவோ எங்கே இருக்கிறேன் என்பதை யாருக்கும் தெரிவிக்காமல் தலைமறைவாக இருக்கிறார்.















ad

ad