புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2013


சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்படும் இரு சந்தேக நபர்களின் மாதிரி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இருந்த போது, இனந்தெரியாத நபர்கள் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.


இதனையடுத்து அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் பராஸ் சவுகதலி வழங்கிய தகவலின் அடிப்படையில் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு பகுதியில் உள்ள ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட மாதிரி படங்களை பொலிஸார் இன்று மாலை வெளியிட்டனர்.

மாதிரி படங்களில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் கிடைத்தால், உடனடியாக 662323 அல்லது 2738088 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர் கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ad

ad