புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013


நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுச் சிறுவர்கள் விவகாரத்தில் அவர்களது பெற்றோர்களை பலவந்தமாக குற்றவாளிகளாக்கி அதன் மூலமான அறிக்கை ஒன்றை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து தமது செயற்பாட்டை சர்வதேசத்தின் முன்னிலையில் நியாயப்படுத்துவதற்கான சூழ்ச்சிகர நடவடிக்கைகளில் நோர்வே அரசாங்கம் இறங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நோர்வே அரசாங்கத்தி;ன் நேரடி கண் காணிப்பின் கீழ் இயங்குகின்ற சிறுவர் நலன் காப்பகங்களால் வெளிநாட்டுப் பெற்றோரிடமிருந்து பலவந்தமாகவும் அதேநேரம் கடத்தல் பாணியிலும் கொண்டுசெல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விடயத்தில் உண்மை நிலைமைகளை ஆய்ந்தறியாத வகையில் தயாரிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் நோர்வே சிறுவர் காப்பங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
இட்டுக்கட்டி தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெற்றோர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஒப்புதல்களை ஜெனீவா பேரவையில் சமர்ப்பித்து அதனுடாக தமது அரசாங்கத்தின் கீழ் இயங்குகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் சதித்திட்டமாக இருப்பதாகச் கூறப்படுகின்றது.
நோர்வே அரசாங்கமானது சிறுவர்கள் விடயத்தில் சர்வதேசத்தின் முன்னிலையில் இழந்துள்ள நன்மதிப்பினை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இவ்வாறான சூழ்ச்சித்திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சித்திருப்பதாக பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் நோர்வே அரசாங்கம் இவ்வாறு செய்யத்துணிவதன் மூலம் தமது பிள்ளைகளின் வாழ்க்கையும் அவர்களது எதிர்காலமும் கலாசார பண்பு நிலைகளும் சீரழிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர் காப்பகங்களிடமிருந்து தமது பிள்ளைனளை மீட்டுக் கொள்ளும் பொருட்டு டொம் தேவாலயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டதன் விளைவாகவே இவ்விவகாரம் பூதாகாரமாகி உலகெங்கிலும் பரவியுள்ளது என்பதைக் காரணம் காட்டி குறித்த பெற்றோர் மீது அரசியல் ரீதியிலான மறைமுகப்பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
சட்டம், நீதித்துறை மற்றும் பொலிஸார் என சகல தரப்பினருமே சிறுவர் காப்பகங்களுக்கு 

சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று ஜெனீவா பேரவையில் சமர்ப்பிக்கும் முயற்சியில் நோர்வே


சாதகமாக செயற்படுவதால் தாமும் தமது குழந்தைகளும் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளான அடிப்படை மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை எங்குமே முறையிட
முடியாதிருப்பதாக கூறுகின்ற பெற்றோர் நோர்வே சிறுவர் காப்பக விவகாரமானது ஒரு இருட்டறை விவகாரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.
இதன்மூலம் நோர்வே அரசாங்கத்தின் பொறுப்பற்றத்தன்மை வெளிப்பட்டு நிற்பதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது போலந்து நாட்டைச்சேர்ந்த குழந்தை ஒன்றை அந்நாட்டுப் பொலிஸார் நோர்வேக்குள் பிரவேசித்து சிறுவர் காப்பகத்திடமிருந்து காப்பாற்றிச் சென்றுள்ளதுடன் நோர்வே சிறுவர் காப்பகங்களை ஒரு சிறைக்கூடமாகவே சித்திரித்துள்ளதுடன் சிறையிலிருந்தே போலந்து நாட்டுக்குழந்தை மிட்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டுப் பொலிஸார் கூறிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, போலந்து, கானா, புரூண்டி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமர்சனத்தையும் எதிர்ப்பினையும் சம்பாதித்துக்கொண்டுள்ள நோர்வே அரசாங்கம், தற்போது தன்மீதுள்ள குற்றத்தை சரி செய்வதற்கும் பெயரைக் காப்பாற்றிக்கொள்வதற்கும் அப்பாவிக்குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் பலிக்கடாக்களாக்க முயற்சித்து வருவதாக சிறுவர் காப்பகங்களிடம் குழந்தைகளை இழந்துள்ள பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும் குழந்தைகள் பரமரிப்பு என்றும் நலன் பேணல் என்றும் கூறி அராஜகம் மற்றும் சர்வாதிகார ரீதியில் செயற்பட்டு குழந்தைகளை நிரந்தரமாகப் பிரித்து வைத்து பெற்றோயையும் குழந்தைகளையும் உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்யும் இத்தகைய செயற்பாடுகள் 

தொடர்பில் ஜெனீவா பேரவை அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

ad

ad