புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013


ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இலங்கைக் குழுவினர் ஜெனீவா சென்றடைந்துள்ளனர். இந்நிலையில்,நாளை விசேட உரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஆரம்பமான மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கையில் பாரிய யுத்தமீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன், பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்கா நாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.
இவை எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கும் வகையில் மஹிந்த சமரசிங்க நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இதேவேளை, ஜெனீவாத சென்றுள்ள இலங்கைக் குழுவினர், இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad