புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013

யாழ். பல்கலைப் பட்டமளிப்பில் ஊடகங்களுக்கு தடை; ஊடகவியலாளர்களையும் மிகக் கேவலமாக நடத்தினர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்  மேற்கொண்டிருந்த சம்பவம் யாழ்.
மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு நிகழ்வுகளை அரங்கினுள் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனை நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பதிவாளர் அறிவித்திருந்தார். அதன்படி ஊடகங்கள் அரங்கினுள் சென்று புகைப்படம் எடுக்க முடியாது என்றும் அரங்கிற்கு செல்லும் முன்னர் புகைப்படம் எடுக்க முடியும்.

ஊடக பிரசுரங்களுக்கு பயிற்சி ஊடகவியலாளர்களான ஊடகவளங்கள்  மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களால் அரங்கினுள் எடுக்கப்படும் புகைப்படங்களை பிரசுரிக்கலாம் எனவும் அறிவித்திருந்ததுடன் ஒவ்வொரு ஊடக நிறுவனங்களுக்கும் குறித்த நடைமுறைகளைக் கொண்ட அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று செய்தி சேகரிக்கும் நோக்குடன் சென்ற ஊடகவியலாளர்கள்  பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர்.

தமிழ் அரசியல் கட்சிகள் நடாத்தும் ஒரு ஆர்ப்பாட்ட இடத்தில் குவிக்கப்படும் இராணுவம் , பொலிஸாரினைப் போல இன்றைய தினம் வளாகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்றைய தினம் பல்கலைக்கழக நிர்வாகமே தங்கள் கையில் தான் என்ற போக்குடன் அவர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

அதன்படி வளாகத்திற்குள் சென்ற ஊடகவியலாளர்களை மறித்த சில பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 'யார் நீங்கள்? எங்க போறியள்?, என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர்கள்  நாங்கள் ஊடகவியலாளர்கள்  படம் எடுப்பதற்காக வந்தோம் எங்களுடைய சக ஊடகவியலாளர்கள்  சிலர் நிற்பதையும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு போக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு அவர்கள் நீங்கள்  'ஊடகவியலாளர்கயோ அல்லது யாராகவும் இருக்கலாம் இப்ப நீங்கள் கட்டப்பட்டிருக்கும் கயிற்றுக்கு வெளியே போங்கோ' என அதிகார தொனியில் கூறினர்.

எனினும் குறித்த ஊடகவியலாளர்கள் மீண்டும் அவர்களிடம் போக வேண்டும் என தெரிவித்ததுடன் 'ஊடகம் எண்டா அதை காட்டுற மாதிரி வாங்கோ. உங்களுக்கு ஒண்டும் தரவில்லையா உங்கட ஊடகத்தில ஐ.சி இருந்தா கொழுவிக் கொழுவிக் கொண்டு வாங்கோ' ஐ.சி இருக்கோ , தமிழில் தானே சொல்லுறம் வெளிய போ எண்டால் போ' என நாகரிகமற்ற முறையில் பேசினர்.

இதேவேளை அவர்களின் சொல்லையும் கேட்காது குறித்த ஊடகவியலாளர்கள்  அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு செல்ல முற்படும் போது சம்பவ இடத்தில் நின்றிருந்த ஊடகவியலாளர்களுள் பெண் ஊடகவியலாளர்களும் நின்றிருந்த போதும் எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தையினால் பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளைப்  பிரயோகித்ததுடன் அவர்கள்  திட்டியும் அனுப்பினர்.

இவர்களுடைய இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்தமான பல்கலை நிர்வாகத்தினரையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவதுடன் இதனால் ஊடகவியலாளர்கள்  மத்தியில் பல கேள்விகளையும் எழவைத்துள்ளது.

ஊடகவியலாளர்களது சுதந்திரமான செயற்பாடுகளுக்கு அவர்களது பகுதிக்குள்ளேயே அனுமதி மறுக்கப்படுவது என்பது எவ்வாறு நியாயமானது இந் நிலை தொடர்வதற்கு அனுதிப்பதா எனவும் பலர் கேள்விகளை எழுப்பியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


- at:http://onlineuthayan.com/News_Mid=125441866201717557#sthash.DLS3ujYa.dpuf

ad

ad