புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013






         "ஹலோ தலைவரே... சிறுதாவூரில் ஜெ. தங்கிருப்பதை போன முறையே நாம பேசியிருந்தோம். சசிகலாவும் அங்கேதான் இருக்கிறார்.''-நக்கீரன் 

""இருக்கட்டும்.. சசிகலாவுக்கு பழைய அதிகாரம் இருக்குதா? முன்புபோல தலையீடு செய்கிறாரா? அமைச்சரவை மாற்ற முடிவுகூட அவரால்தான் தள்ளிப்போயிடிச்சின்னு கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலவுதே!''

""சசிகலா உறவினர்கள் வட்டாரத்தில் அப்படிப் பட்ட பேச்சுகள் இல்லை. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில்  நடந்த சுற்றுச்சூழலியல் சம்பந்த மான விருது வழங்கும் விழாவில் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு விருது வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் விஷயத்தில் அவர் அக்கறையா இருக்காராம். அரியவகை வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள், மூலிகை  தாவரங்கள், நுண்ணுயிரிகளைக் கண்ட றிந்ததோடு, நன்னீர் சுற்றுச்சூழல் பற்றியும் திவா கரன் செய்த ஆய்வுக்காகத்தான் இந்தப் பரிசு. அதற்காக கல்லூரிப் பேராசிரியர்களுக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?''


""விசாரணைக்கு வந்த செந்தமிழ்ச்செல்வி என்ற அதிகாரி, திவாகரனுக்கு விருது கொடுத்து ஆய்வரங்கத்துக்கு ஏற்பாடு செய்த பேராசிரியர்கள் பற்றி ரிப்போர்ட் அனுப்ப, இப்ப அவர்களெல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்காங்க. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான் வெயிட்டிங்கில் இருப் பாங்க. இப்ப பேராசிரியர்களுக்கும் அந்த நிலைமை. சிறுதாவூரில் சசிகலா இருந்தாலும், அவரது உறவினர்கள் மீதான கோபம் ஜெ.வுக்கு இன்னும் குறையலைங்கிறதன் வெளிப்பாடுதானாம் இது. திவாகரன் தரப்போ, எங்களால கட்சிக்காரங்க கஷ்டப்பட்டாங்க. இப்ப பேராசிரியர்கள் கஷ்டப் படுறாங்க. காலம் மாறும். மறுபடியும் பவர் கிடைக்கும். அப்ப இவங்களுக்கு வேண்டியதை செய்வோம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.''

""எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையேன்னு பேராசிரியர்கள் கேட்கலையே..''

""தலைவரே.. எம்.பி. தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் வேக வேகமா வியூகம் வகுத்துக்கிட்டி ருக்கு. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரா நியமிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி, கட்சியின் மாநிலத் தலைவர்களை டெல்லிக்குக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தினார். அதில் அவர் சொன்ன முக்கியமான விஷயம், மற்ற கட்சிகள் எதிர்பார்க்கிற மாதிரி எம்.பி. தேர்தல் முன்கூட்டியெல்லாம் வராது. அந்த மனநிலையில் நீங்க இருக்கவேண்டாம். இந்த ஆட்சி முழுமையாக நீடிக்கும். அதற்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.  அதோடு, காங்கிரசை மீண்டும் வெற்றி பெறவைக்க வேண்டிய பொறுப்பு என்கிட்டே கொடுக்கப்பட்டி ருக்கு. அதனால உங்க மாநிலத்தில் எந்த விஷயமா இருந்தாலும் என் கவனத்துக்குக் கொண்டு வாங்க. நான் எடுக்கிற முடிவு உங்க மாநில அரசியலுக்கு சரிப்பட்டு வராதுன்னா உடனே சுட்டிக்காட்டுங் கன்னும் ராகுல் சொன்னாராம்.''

""மாநிலத் தலைவர்கள் என்ன சொன்னாங் களாம்?''

""வேட்பாளர்களைத் தேர்வு செய்றப்ப மாநிலத் தலைமையிடம் கலந்தாலோசிக்கணும்னும் எங்க பேனலில் உள்ள ஆட்களிலிருந்து ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்கணும்னும் பெரும்பாலானவங்க சொல்லி யிருக்காங்க. அப்ப, ராகுல் ஆதரவுத் தலைவர் ஒருவர் குறுக்கிட்டு, உங்க லிஸ்ட்டில் உள்ள 5 பேரும் சரியில்லைன்னா என்ன செய்வதுன்னு கேட்க, ஆட்சியதிகாரம் நம்மகிட்டேதானே இருக்கு. உளவுத்துறையும் உங்க கட்டுப்பாட்டில்தானே.. விசாரித்து முடிவெடுங்கன்னு சொல்லியிருக்காங்க.'' 

""தமிழக காங்கிரஸ் தலைவரும் போயிருந்தாரே.. ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் உண்டா?''

""தான் பதவிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் நிர்வாகிகளைப் போடமுடியலைன்னும், அதனால் எந்த நிகழ்ச்சியை நடத்துவதா இருந்தாலும் திணற வேண்டியிருக்குன் னும் ஞானதேசிகன்  சொல்லியிருக்காரு. இன்னும் 2 மாசத்தில் எல்லா மாநிலத்திலும் நிர்வாகிகள் நியமனம் முடிவடைஞ்சிடும்னு ராகுல் நம்பிக்கைக் கொடுத்திருக்காரு. காங்கிரஸ் கட்சியில்  இப்படி தேர்தல் ஆலோசனைகள் நடந்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ் ணன் அவரோட சொந்த ஏரியாவான நாகர்கோவிலுக்குப் போனப்ப கட்சிக்காரங்களெல்லாம் சூழ்ந்துக்கிட்டு கேள்வி கேட்டிருக்காங்க.''

""என்ன கேள்வி?''

""விஸ்வரூபம் விவகாரத்தில் நீங்க ஏன் அடக்கி வாசிச்சீங்கன்னும், அடிப்படைவாதத்துக்கு ஆதரவா அ.தி.மு.க அரசாங்கம் செயல்படுது. நீங்க ஏன் எதிர்த்து அறிக்கை தரலைன்னு கேட்டிருக்காங்க. அப்ப ஒருவர் பழைய சம்பவத்தை சுட்டிக் காட்டியிருக்காரு. மண்டைக்காடு கலவரத்தையடுத்து, சமாதான கமிட்டி கூடுனப்ப அதில் பேசுன எம்.ஜி.ஆர்., அந்தப் பகுதியில் இந்துக்கள் கடலில் குளிப்பதாலதான் கலவரம் வருதுன்னு சொல்ல உடனே இந்து அமைப்பைச்சேர்ந்த  தாணுலிங்க நாடார் கோபமா, இந்துக்களால் கலவரம் வருதுன்னு சொல்வதற்கா நீங்க முதல்வரா இருக்கீங்க? உங்க கையில்தானே போலீஸ் துறை இருக்கு. நாங்க குளிச்சாலும் கலவரம் வராத மாதிரி பார்த்துக்குங்கன்னு சொன்னாருங்கிறதை பொன்.ராதாகிட்டே சுட்டிக்காட்டியிருக்காங்க.''

""அவரோட ரியாக்ஷன் என்ன?''

""நீங்க சொல்றதெல்லாம் சரிதான்னு சொன்ன பொன்.ராதா, மோடி தலைமையி லான கூட்டணியையோ  ஆட்சியையோ ஜெ. ஏற்றுக்கொள்ளும் சூழல் வரும்னும் அதனால எதிரா அறிக்கை விடவேணாம்னு மேலிடத்தி லிருந்து எனக்கு உத்தரவு வந்திருக்கேன்னு சொல்லியிருக்காரு. அ.தி.மு.க. தரப்பில் விசாரித் தால், போனமுறை உங்க நக்கீரனில் எழுதுனீங் களே.. .. அதுபோல சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஓட்டுகளையும் தலித் ஓட்டுகளையும் கணக்குப் போட்டுத்தான் எங்க தலைமை எம்.பி. தேர்தலை சந்திக்கப் போகுதுன்னு சொல்றாங்க. ஜெ. தலைமையில் 65 ஜோடிகளுக்கு நடந்த திருமண விழாவில்கூட, காங்கிரசும் பா.ஜ.க.வும் தமிழர்களுக்கு கூட்டாக சதி செய்யுதுன்னும் அவங்களால இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாதுன்னும் ஜெ. பேசியதையும் சுட்டிக்காட்டுறாங்க.''

""ஜெ. நடத்தி வைத்த கல்யாணத்தில் இந்த அரசியல் வியூகத்தையும் குட்டிக் கதைகளையும் தாண்டி வேற என்ன விசேஷ மாம்?''



""ஏற்கனவே இந்து அறநிலையத்துறை  சார்பில் திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வச்சப்ப, அதில் பல ஜோடிகள் ஏற்கனவே கல்யாண மானவங்கங்கிறதை நம்ம நக்கீரன்தான் ஆதாரத்தோடு அட் டைப்படக் கட்டுரை யாகவே வெளியிட்டு அம்பலப்படுத்துனிச்சி. அதனால, அறநிலை யத்துறை அதிகாரிகள் அதிரடியாக தூக்கி யடிக்கப்பட்டாங்க. இந்த முறை, ஜோடி களை சரிசெய்யும் வேலைகளை அந்தந்த ஏரியாவில் உள்ள அ.தி. மு.கவினரே எடுத்துக்கிட்டாங்க. அவங்க செலக்ஷனை எம்.எல்.ஏ சரிபார்த்து, மந்திரி செக் பண்ணி, புது ஜோடிகள்னு உறுதியானபிறகுதான் கல்யாண ஜோடிகளா பட்டியலில் சேர்த்தாங்க. இந்த வேலையை  முழுமையா எடுத்துக்கிட்டது பொதுப் பணித்துறைதான். அந்தத் துறையின் காண்ட்ராக்ட்டர்கள்தான் பந்தல், சாப்பாடு, மின்தடை இல்லாமலிருக்க ஏராளமான ஜென் செட்டுகள்னு எல்லாத்தையும் கவனிச்சிக்கிட் டாங்க. பொதுப் பணித்துறை மந்திரி கே.வி.ராம லிங்கத்தோட மகனுக்கும் இந்த மேடையில்தான் திருமணம் நடந்தது.''

""கே.வி.ராமலிங்கம் பேசுறப்ப, வார்த்தைக்கு வார்த்தை ஜெ.வை அடுத்த பிரதமர்னு சொல்ல, அதை ஜெ.வும் ரொம்ப ரசித்துச் சிரிச்சதை டி.வி.யில் பார்த் தேம்ப்பா...… எம்.பி. தேர்தல் சம்பந்தமா தி.மு.க ஏரியா        வில் என்ன நடந்துக்கிட்டிருக்கு?''

 ""தலைவரே.. டெல்லி காங்கிரஸ் வட்டாரத்திலிருந்தே ஒரு தகவல் கிடைத்தது. பரபரப்போடுதான் அதை சொன்னாங்க. போன வெள் ளிக்கிழமையன்னைக்கு சென்னையிலே அறிவாலயத்தில் கலைஞரும் பேராசிரியரும் காங்கிரஸ் கூட்டணி சம்பந்தமா விவாதிச்சாங்க, அப்படிங் கிறதுதான் டெல்லிக்கு கிடைச்ச தகவல். நீண்ட நேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப்பிறகு, இரண்டு பேரும் டி.ஆர்.பாலுவை வரச்சொன்னாங்களாம்.''

""எதற்காம்?''


""2ஜி வழக்கை காட்டித் தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக சீட்டுகளைக் கேட்டு வாங்கியது. எம்.பி. தேர்தலிலும் அதேபோல நெருக்கடி தர நினைச்சா நடக்காதுன்னும், வழக்கில் நெருக்கடி தந்தால் காங்கிரசோட கூட்டணியே வேணாம்னு அவங்க மேலிடத்துக்கிட்டே சொல்லிடுங்கன்னு டி.ஆர்.பாலுகிட்டே கலைஞரும் பேரா சிரியரும் சொல்லியிருக்காங்கன்னு  டெல்லிக்கு நியூஸ் வந்திருக்கு. அதுதான் இப்ப காங்கிரஸ் மேலிடத்தில் ஹாட்  டாபிக்.''

""அ.தி.மு.க போடும் சீட் கணக்குப் பற்றி தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும் தகவலும் பரபரப்பா விவாதிக்கப்பட்டது. அதை நான் சொல்றேன். 40 சீட்டு களில் பா.ம.க.வுக்கு 3, ம.தி.மு.க.வுக்கு 2, சி.பி.எம். 2, சி.பி.ஐ. 1 என 8 போக மீதம் 32 தொகுதிகளிலும் போட்டியிடுவதுங் கிறதுதான் அ.தி.மு.க. தலைமையின் இப்போதைய கணக்காம்.''

படங்கள் : ஸ்டாலின்

 லாஸ்ட் புல்லட்!

ஈழத்தமிழர்  உரிமைகளுடன் தமிழக மீனவர்களின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்துள்ள டெசோவின்  ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரத்தில் திங்களன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீ உள்ளிட்டோருடன் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று தமிழக மீனவர்களுக்காக  முழக்கமிட்டனர். மறுநாள், நாகையில் இதேபோன்ற ஆர்ப்பாட்டம். மக்கள் நலப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும்போது மற்ற போராட்டங்களைவிட அதிக ஆதரவு கிடைக்கிறது என்கிறார்கள் உ.பிக்கள்.

தமிழக அரசின் கூடுதல் டி.ஜி.பி. உளவுப்பிரிவு மற்றும் மாநில சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. (பொறுப்பு) என ஒரே நேரத்தில் இரண்டு மிகப்பெரிய பதவிகளை வகித்து வந்தவர் கு.ராமானுஜம். இப்போதும் அது தொடர்கிறது... எப்போதும் இதுபோன்று இரண்டு பதவிகளை ஒரே சமயத்தில் ஒருவரே கவனித்தால் அதற்கு இரண்டு சம்பளப்பட்டியல் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். ராமானுஜம் கணக்கிலும் அப்படி இரண்டு சம்பளப் ப(ட்)டி(யல்)கள் வந்திருக்கிறது. ஆனால் ராமானுஜமோ "அடிஷனலாதான் நான் பார்த்தேன். இதற்கு ஏன் இரண்டு சம்பளம்...' என்று அதை மறுத்துவிட்டதோடு அந்த சம்பளத் தொகையை போலீஸ் வெல்ஃபேர் கணக்கில் வைக்கச் சொல்லிவிட்டாராம்.

காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் தலைமையில் செயல்படும் அகில பாரத சத்ரிய மகாசபாவின் துணைத்தலைவராக இருப்பவர் சரத்பவாரின் சகோதரர் சசிகாந்த் பவார். இந்த மகாசபாவின் கிளை தற்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ் நடத்தியபோது அவருடன் இணைந்து பணியாற்றிய சி.ஆர்.சூரியன்தான் தமிழகக் கிளையின் செயல்தலைவர். தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார் பல்லவமோகன். வன்னியர் சமுதாயத்தவர் பலரையும் அகில பாரத சத்ரிய மகாசபாவின் தமிழக  கிளை தொடக்க விழாவிற்குத் திரட்டியிருந்தார் சி.ஆர்.சூரியன்.

ad

ad