புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013

 அப்பா மகள் உறவு தான் -குஷ்பு -நக்கீரனுக்கு பேட்டி 
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தொனிக்கும் வகையில்  பேட்டியளித்ததற்காக ஸ்டாலின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் குஷ்பு. தாக்கியவர்களின் செயலை
காட்டுமிராண்டித்தனம் என கடுமையாக கண்டித்தார் கலைஞர். தி.மு.க.வில் இந்த பரபரப்புகள் ஓய்ந்துகொண்டிருந்த நிலையில், கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து ஒரு பத்திரிகையில் செய்தி வர, அந்த பத்திரிகையை தமிழகம் முழுவதும் கொளுத்திக்கொண்டிருக் கிறார்கள் உடன்பிறப்புகள். 

இந்த சூழலில், ஏ.வி.எம். ஸ்டுடி யோவில் ஷூட்டிங்கில் இருந்த குஷ்புவை நாம் சந்தித்தபோது இப்பிரச்சினை தொடர்பாக ஆவேசமும் அமைதியும் கலந்த கலவையாக மனம் திறந்து பேசினார் குஷ்பு.


* தங்களையும் கலைஞரையும் இணைத்து ஒரு பத்திரிகை எழுதிய செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்?

குஷ்பு : ஊடகங்களுக்கு ஒரு எத்திக்ஸ் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். எழுத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்பது கீழ்த்தரமான, நாலாந்தர சிந்தனை. அதுவும் தனிமனித தாக்குதல், கேரக்டரைஸேஷன் அட்டாக் என்பது பத்திரிகை தர்மங்களை குழி தோண்டிப் புதைத்து விட்டதற்கு சமம். அந்த பத்திரிகைக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. 

தலைவர் கலைஞருக்கும் எனக்குமான உறவு அப்பா-மகள் போன்றது. அந்த புனிதமான உறவையே இவர்கள் கேள்விக்குறியாக்கு கிறார்கள் என்றால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவர் களாகவே நிரூபித்துக்கொள்கிறார்கள். எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. நான், இரண்டு பெண் குழந் தைகளின் தாய். தமிழக அரசியலில் கலைஞர் எவ் வளவு பெருமைக்குரியவர். கழகம் என்கிற மிகப்பெரிய குடும்பம் அவருக்கு இருக் கிறது. எங்கள் இருவரையும் இணைத்து எழுத அவர் களுக்கு எப்படி மனசு வரு கிறது? தங்களின் வருமானத் திற்காக பத்திரிகை தொழி லின் புனிதத்தையும் கொச் சைப்படுத்துகிறார்கள்.  ஒரு மாபெரும் இயக்கத்தின் மூத்த தலை வரையும் ஒரு குடும்ப தலைவியையும் கொச் சைப்படுத்தும் நோக்கம் ஜனநாயகத்துக்கும் சமூகத்துக்கும் ஆபத்தானது. இன்னும் சொல்லப்போனால் தந்தை பெரியாரையும் அன்னை மணியம்மையையும் கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் அது எழுதப்பட்டி ருக்கிறது. அன்னை மணியம்மை எவ்வளவு உயர்வானவர். அந்த அன்னையின் அருமை -பெருமைகள், திராவிட இயக்கத்திற்காக அன்னை ஆற்றிய தொண்டுகள், செய்த தியாகங்கள்  எல்லாம் அந்த பத்திரிகைக்குத் தெரியுமா? திராவிட இயக்கத் தலைவர் களை கொச்சைப்படுத்துவதற்காகவே அதை எழுதியிருக்கிறார்கள். என் னைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கலைஞரை கேவலப்படுத்துவது தான் அவர்களின் நோக்கம்.

* நீங்கள் ஒரு நடிகை என்பதால்தான் உங்களைக் குறிவைத்து தாக்குகிறார்களா?

குஷ்பு : இருக்கலாம். ஏனெனில் நடிகை என்றாலே ஒரு இளக்காரம். அவளைப் பற்றி எழுதினால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற நினைப்பு. ஆனா, நான் சும்மா இருக்க மாட்டேன். பதிலுக்குப் பதில் என் கருத்துக்களை வெளிப்படுத்த நான் தயங்கியதில்லை. என்னைக் கொச்சைப்படுத்தும் இந்த ஆண் கள் முதுகெலும்பற்றவர்கள். அமைதியாக நான் இருப்பதால் வீழ்ந்துவிட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். நாகரிகம் கருதி நான் பொறுமையாக இருக்கிறேன். 

நான் பொறுமையை இழந்தேன் எனில் அதை உங்களால் தாங்க முடியாது. பத்திரிகைச் சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் இவைகளுக்கெல்லாம் மிகுந்த மரியாதை தருபவள் நான். ஆனால், என்னைப் பற்றி எழுதியிருப்பது இந்த சுதந்திரங்களுக்குள் அடங்குகிறதா? என்பதை சமூக பொறுப்புள்ள பத்திரிகையாளர்கள்தான் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் எழுதி என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம் என்று கனவு காணாதீர்கள். அது நடக்காது.

* அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவீர்கள். அது உங்களுக்கு இயல்பானது. அதையும் தாண்டி இப்போது அரசியல் ரீதியாகவும் பத்திரிகை ரீதியாகவும் தாக்குதல்களுக்கு ஆளாகுகிறீர்கள். இத்த கைய தாக்குதல்களால்,"ஏண்டா அரசியலுக்கு வந்தோம்' என்கிற சலிப்புத் தோன்றுகிறதா?

குஷ்பு: சில சமயங்களில் அப்படித் தோன்றுவது உண்டு. ஆனால் அதுவே என்னை ஆக்கிரமித்துக்கொள்ள நான் அனுமதிப்ப தில்லை. காரணம், அரசியலை விருப்பப்பட்டு நான் தேர்ந்தெடுத்தேனே ஒழிய, அரசியலுக்குள் என்னை யாரும் இழுத்து வரவில்லை. என் னை யாரேனும் வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுத்து வந்திருந்தால் அப்படிப்பட்ட எண்ணம் முழுமையாக வந்தி ருக்கும். ஆனால், தமிழக அரசியலால் நான் ஈர்க்கப்பட்டேன் என்பதுதான் உண்மை. அரசியல் என்றால் நிறைய "அரசிய லை' எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நேர்மையான அரசியலையும் துணிச்சலான கருத்துக் களையும் தூய்மையான செயல்களையும் கொண்டிருந்தால் நல்ல அரசியல்வாதியாக சமூகத்திற்கு அடையாளப்படுத்தப் படுவோம் என்பது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது.  சமூகத் தின் மீது அக்கறை கொண்டு அரசியலுக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும் என்கிற குரல்கள் சர்வதேச அளவில் சமீபகாலமாக எதிரொலிக்கவே செய்கின்றன. ஆனால், அந்த பெண்கள் நடிகைகளாக இருந்தால் கேவலமாக பார்க்கப்படுகிற, சித்தரிக்கப்படுகிற போக்கு ஊடகங்களாலேயே மேற்கொள்ளப்படுகிறபோது மனது வலிக்கிறது. இருப்பினும் இதை எல்லாம் தாண் டித்தான் அரசியலை நேசிக்கிறேன். அந்த நேசிப்பு, அர சியல் மீதான பிடிப்பை மேலும் மேலும் இறுக்க மடைய வைக்கிறதே தவிர சலிப்பை ஏற்படுத்தவில்லை. இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டி யிருப்பதால்தான் அரசியலுக்கு பெண்கள் வர தயங்கு கிறார்களோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. அரசியல் அதிகாரம் பெண்களுக்கு கிடைக்காத வரையில் நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான எந்த சமூக மாற் றமும் நடந்து விடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. 

* பொது வாழ்க்கைக்கு வருகிற பெண்கள் இப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொள்ளும் போது, அப்பெண்ணின் குடும்பத்தினர் "அரசியலே வேண்டாம்; விலகிவிடு' என்று வலியுறுத்துவார்கள். உங்கள் வாழ்க்கையில் எப்படி? உங்கள் குடும்பத்தினர் உங்க ளுக்கு ஆதரவாக இருக்கிறார்களா?

குஷ்பு : என் கணவர் சுந்தரும் எங்கள் குடும்பமும் 200 சதவீதம் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இது நான் பெற்ற பேறு. அதேசமயம், நான் கேவலப்படுத்தப் படுகிற போது ஒரு கணவராக சுந்தருக்கு வருத்தம் இருக்கிறது. அந்த வருத்தம் கோபமாகவும் வெடிக் கிறது. அந்த கோபம் என் மீது அல்ல. இந்த சமூகத் தின் மீது. இந்த அரசியல் மீது. பொறுப்பற்றத் தனமாக எழுதும் இந்த பத்திரிகைகள் மீது. இருப்பினும் என்னை தோளோடு அணைத்துக்கொண்டு, "அரசியல் உன்னை காயப்படுத்தாது. நேர்மையற்ற சில பத்தி ரிகைகள் காயப்படுத்தலாம். அது பற்றி கலங்காதே. உன்னுடைய தைரியமும் சிந்தனையும்தான் எனக்குப் பிடிக்கும். துணிச்சலை எந்த சூழலிலும் இழந்து விடாதே. நான் இருக்கிறேன்' என்று அவர் ஆறுதல் படுத்தும்போது எனக்குள் 1000 வாட்ஸ் எனர்ஜி கிடைத்தது போல உணர்வேன். எனக்கு மிகப்பெரிய பலமே என் குடும்பமும் எனது நட்புகளும்தான். 


என் மீது ஏகப்பட்ட வழக்குகள் 2008-ல் போடப்பட்டன. அத்தனை வழக்குகளையும் உச்சநீதி மன்றம் வரை போய் வெற்றி பெற்று திரும்பினேன். இதற்காக நான் நடத்திய சட்ட போராட்டங்கள் ரொம்ப நீளமானது. இந்த போராட்டங்களால் மன வலிமை பெற்றேன் நான். எனக்கு எதிரான வழக்கு களை எதிர்கொண்டு நான் போராடிக்கொண்டிருந்த போது ஒரு நாள், என் கணவர் சுந்தரிடம், "அரசிய லுக்குள் நுழையலாம் என இருக்கிறேன்' என்றேன். ஆச்சரியப்பட்ட சுந்தர், அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் வாழ்த்துக்கள் சொன்னார். அத்துடன், "எந்த கட்சியில் சேரப் போகிறாய்?' என்று அவர் கேட்க, "திராவிட முன்னேற்ற கழகம்' என்றேன். இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறேன். அப்படிப் பட்ட சூழலில் நான், தி.மு.க. என்றதும் ரொம்ப வே அதிர்ச்சியடைந்தார் சுந்தர். உடனே "ஏன்? எதற்கு? தி.மு.க.?' என்று சுந்தர் கேட்டபோது, "நேர்மையாக அரசியல் செய்ய நினைப்பவர் களுக்கு தி.மு.க.தான் சரியான கட்சி. உள் கட்சி ஜனநாயகமும் தலைவர்களை சந்தித்து மனதிற்கு பட்டதை சொல்கிற வாய்ப்பும் தி.மு.க.வை விட்டால் வேறு கட்சியிடம் இல்லை என்பது என் எண்ணம். அரசியலில் தொண்டர்களின் கருத்துக்கு மரியாதை தருகிற தலைவர்கள் தி.மு.க.வில்தான் இருக்கின்றனர் என்பதை படித்தும் கேள்விப்பட்டும் தெரிந்துகொண்டேன்' என சுந்தரிடம் விவரித்தேன். ரொம்பவும் பிரமிப்புடன் என்னைப் பார்த்தார். உடனே, "எப்போது சேரப் போகிறாய்?' என்று அவர் கேட்டபோது, "என் மீது வழக்குகள் நிறைய போடுகிறார்கள். இப்போது நான் போய் சேர்ந்தால் வழக்குகளுக்குப் பயந்து அரசியலுக் குள் வருவதாக சொல்வார்கள். அதனால் வழக்குகளை ஜெயித்துவிட்டுத்தான் சேர்வேன்' என்றேன். அந்த நேர்மை என் கணவருக்குப் பிடித்திருந்தது. அதேபோல 2010 மே மாதம் என் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றேன். அதன் பிறகே தி.மு.க.வில் இணைந்தேன்.

* பத்திரிகைச் செய்திக்குப் பிறகு கலைஞரை சந்தித்தீர்களா?

குஷ்பு : என் கணவர் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டி ருந்ததால் அங்கு நான் போய்விட்டேன். அதனால் கலைஞரை சந்திக்கவில்லை. ஆனால், இரண்டு முறை ஃபோனில் பேசினேன். எனக்கு ஆறுதல் சொன்னார் தலைவர் கலைஞர்.

* உங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் சேர உங்களுக்கு அழைப்பு வந்ததாமே?

குஷ்பு : எனக்கு எதிராக நடப்பவைகளில் இதுவும் ஒன்று. அப்படி எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. வதந்திகளுக்கு பதில் சொல்ல நான் விரும்புவதில்லை. தி.மு.க.வையும் என்னையும் பிரிக்க முடியாது. கட்சி மாற வேண்டிய அவசியமும் இல்லை. அந்த எண்ணமும் எனக்கில்லை.

சந்திப்பு : இரா.இளையசெல்வன்
அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின்


தன்னையும் குஷ்புவை யும் இணைத்து எழுதப்பட்ட செய்திக்கு தனக்கே உரிய நாகரிகத் தோடு கண்டனம் தெரிவித்திருக்கிறார் கலைஞர். அதில், ""கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்பவை ஜனநாயக நாட்டில் எந்த அளவுக்கு முக்கியமானவையோ அதே அளவு முக்கியமானவை சமூகப் பொறுப் பும் பத்திரிகை தர்மமும் என்பதை ஜனநாயக உரிமைகளிலும் கடமைகளிலும் நம்பிக்கையுள்ள எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.

சமூகப் பொறுப்பு என்பதைப் பற்றி கொஞ்ச மும் கவலைப்படாமல், பத்திரிகா தர்மத்தை கிஞ் சிற்றும் பேணாத பத்திரிகை சுதந்திரம் படிப்போர் மனங்களில் நஞ்சைக் கலக்கவும் ஜனநாயக சமூகத்தின் ஆணிவேரை அரிவாள் கொண்டு அறுக்கவும் பயன்படுமேயல்லாமல், ஜனநாயகத் தை செழுமைப்படுத்தவோ சமூகத்தை ஆரோக் கியப்படுத்தி ஆக்கப்பூர்வமான பாதையில் அழைத் துச் செல்லவோ அணுவளவும் பயன்படாது.

2011 பொதுத்தேர்தலில் கழகம் வெற்றி வாய்ப்பு இழந்து மூன்றாம் இடத்துக்கு வந்ததற்குப் பிறகு தி.மு.க.விற்கு ஜென்ம விரோதிகள் என தம்மைத் தாமே நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு சில பத்தி ரிகையாளர்கள் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கழகத்தை ஒழித்துக் கட்ட இதுவே சிலாக்கியமான தருணம் என்று முடிவெடுத்து காரியத்தில் இறங்கி யிருப்பது கண்கூடு. இதற்கு மேலிடத்து ஆசிர் வாதமும் அரவணைப்பும் அறிவுரைகளும் உண்டு என்பதை அனைவரும் அறிவர். தீட்டப்பட்ட சதித் திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் கழக முன் னணியினரைக் காயப்படுத்தி, கலகமூட்டிக் குழப் பம் ஏற்படுத்திடும் கற்பனையான செய்திகள்.

என்னைப் பற்றிக்கூட நான் எப்போதும் கவலைப்படுவதில்லை. ஆனால், ஒரு பெண்மணியைப் பற்றி, அதுவும் கணவனுடனும் குழந்தைகளுடனும் குடும்பம் நடத்தி வாழ்ந்துகொண்டு கட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி நாராச நடையில் கொச்சைப்படுத்தி எழுதுவது முறை தானா? தமிழக மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறார்களா? மற்றவர் மனம் எப்படியெல்லாம் வேதனைப்படும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு பண்பாடு -பத்திரிகா தர்மம் போன்ற நெறிமுறைகள் பழங்குப்பைதான்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை யாளனாகவே வளர்ந்து வந்திருக்கிறேன். எனது கைகளைக் கொண்டே என்னை அடிப்பதா என்ற தயக்கத்தில் இதுவரை அமைதியோடு பொறுமை காத்து வந்தேன். பத்திரிகையாளர்கள் சிலர், என்னை பொறுமையின் விளிம்பிற்கே தள்ளிக்கொண்டிருப் பது புரிகிறது. சேற்றை வாரி வீசுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதி யாக முடிவெடுத்து அறிவிக்க லாமா? அல்லது கட்சி ரீதி யாக அந்தப் பத்திரிகை அலு வலகத்தின் முன்னாலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா? என் றிருக்கிறேன்'' என்று குறிப் பிட்டிருக்கிறார் கலைஞர்.

ad

ad