புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2013


அயர்லாந்து, லிபிய தூதர்களுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு: இலங்கைக்கு எதிராக வாக்களிக்க கோரிக்கை 
ஜெனீவாவில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு உலக நாடுகளிடம் திமுக வலியுறுத்தி வருகிறது.
 இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்குமாறு அயர்லாந்து, லிபிய தூதர்களை சந்தித்து திமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பல்வேறு நாட்டு தூதர்களை திமுக எம்பிக்கள் சந்தித்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரி வருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை இதுதொடர்பாக அயர்லாந்து, லிபிய தூதர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், ரித்திஷ், டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஐ.நா. ஆணைய தீர்மானம்: இலங்கைக்கு எதிராக இந்தியா ஆதரிக்க ஈழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை
ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என ஈழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன.
பிரிட்டிஷ் தமிழ் அமைப்பைச் சேர்ந்த நிர்மலன், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஜெனீவாவில் அடுத்த மாதம் நறைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி லிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
இலங்கை அரசு துன்புறுத்துகிறது: பிரிட்டன் வாழ் தமிழர்கள் அமைப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என பிரிட்டன் வாழ் தமிழர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்த அமைப்பின் பிரதிநிதி கனோர் நிர்மலன் இதனை வலியுறுத்தினார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் இருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் அடைந்த தமிழர்கள், மீண்டும் இலங்கை செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.
அவ்வாறு இலங்கை செல்லும் தமிழர்களை, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்தவர்கள் என்று கூறி துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ad

ad