புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013


அண்மைக் காலமாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் தமிழீழ ஆதரவு, சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைவாக, தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டுமென பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான்
குணரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வலுப்பெற்று வருவதாகவும், தமிழ் மக்களை போராட்டங்களில் ஈடுபட உந்தும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென சிறிலங்கா அரசு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடடிக்கை எடுக்கத் தவறினால், அது இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் பரவக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையுடன் புலிகளுக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வந்ததாகவும், மீளவும் அந்த ஆதரவு வலுப்பெறத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியத் தமிழர்கள் மத்தியில் சிறிலங்கா மீது வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவகின்றன. இந்த பிரச்சாரங்களுக்கு பதில் பிரச்சாரங்களை சிறிலங்கா ஊடக அமைச்சு மேற்கொள்ள வேண்டுமெனவும், அந்தப் பிரச்சாரங்கள் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad