புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013


வடகொரியா வெற்றிகரமாக அணுப் பரிசோதனை: சர்வதேசம் அதிர்ச்சி!

சர்வதேச எதிர்ப்புகளை மீறி  வடகொரியா  வெற்றிகரமாக அணுப் பரிசோதனையொன்றை நடத்தி முடித்துள்ளது.
நிலத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையானது சிறிய செயற்கை பூகம்பமொன்றை ஏற்படுத்தியதாக பியங்யொங்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.virakesari.lk/image_article/article-2277331-1786417A000005DC-675_634x386.jpg
குறித்த பூகம்பமானது ரிச்சட்ர் அளவில் 4.9 ஆக பதிவாகியதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கட்டளை மற்றும் உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா இச்சோதனையை நடத்தியுள்ளது. இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு அவை அவசரமாக கூடியுள்ளது.
இந்நிலையில் வடகொரியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
வடகொரிய இதுவரை நடத்தியவற்றிலேயே மிகச் சிறப்பான வெடிப்புச் சோதனை இது எனவும் இதன்போது சிறிய அணுச் சாதனமொன்றே பயன்படுத்தப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
http://www.virakesari.lk/image_article/article-2273690-175AFC3A000005DC-507_634x407.jpg
மிகவும் பாதுகாப்பான முறையில் இச் சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது.
எனினும் பரிசோதனையின் பின்னரான பின்விளைவுகள் தொடர்பில் அவதானிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
வடகொரியாவனாது இதற்கு முன்னர் 2006  மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலும் அணுப்பரிசோதனை மேற்கொண்டிருந்தது.
எனினும் அவ்விரு சோதனைகளையும் விட தற்போது நடத்தப்பட்ட சோதனை அதிக சக்தி மிக்க வெடிப்புச் சக்தியை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 வடகொரியாவின் இப் பரிசோதனைக்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து வடகொரியா முன்னெடுத்துள்ள பரிசோதனைகள் வருமாறு:
http://www.virakesari.lk/image_article/article-2267476-172161C1000005DC-82_634x1014.jpg

ad

ad