புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013

இந்திய வீட்டுத்திட்டம் போரால் பாதிப்படைந்தவர்களுக்கா அல்லது வீடற்ற இலங்கையருக்கா இந்திய உயர்ஸ்தானிகரிடம் பாதிப்படைந்த மக்கள் கேள்வி
வவுனியா நெல்லி ஸ்டார் கோட்டலில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் வவுனியா மீள்குடியேறியோருக்கான நலன்பேணும் அமைப்பு, வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின்  பிரதிநிதிகள் மற்றும் வட மாகாணத்தை சேர்ந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இதன்போது வீட்டுத்திட்ட தெரிவில் முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் தனிப்பட்ட ரீதியான அரசியல் செல்வாக்கு மேலோங்கி காணப்படுவதாகவும் வவுனியா, கிளிநொச்சி, மன்னார் , முல்லைத்தீவு மக்கள் தெரிவித்திருந்தனர். 
 
அத்துடன் இந்த வீட்டுத்திட்டம் வீடற்ற இலங்கையருக்கா அல்லது யுத்தத்தால் வீடிழந்த இலங்கையருக்கா என வினவியதுடன் வீட்டுத்திட்டத்தை பெறுவதில் அரசு சார்பான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பயந்த நிலையில் வாழ்வதாகவும் அவர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர். 
 
எனவே வீட்டுத்திட்ட தெரிவில் இந்தியா பக்கச்சார்பற்ற முறையில் சுயாதீனமாக குழுவொன்றினை நியமிக்க வேண்டுமெனவும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
இதனை செவிமடுத்த இந்திய உயர்ஸ்தானிகர் குழு அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் இந்த வீட்டுத்திட்டமானது முற்றுமுழுதாக போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் இது வரை முதற்கட்ட வீட்டுத்திட்டத்தில்  8 ஆயித்து 36 வீடுகளே முழுமையடைந்துள்ளதாகவும் எஞ்சிய வீட்டுத்திட்டங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
 
அத்துடன் வீட்டுத்திட்ட  தெரிவு முறையில் முறைக்கேடுகள் இடம்பெறுமானால் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் யாழ்பாணத்தில் உள்ள துணை அலுவலகத்தில் முறையிடலாமெனவும் தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரம் கிராம அலுவலர் பிரிவு, பிரதேச செயலகம் மற்றும் பொது இடங்களில் 15 நாட்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிகழ்வில் துணைத்தூதுவர் மகாலிங்கம், இந்திய தூதுவர் அசோக் கே . காந்தா , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் ,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் க. சிவலிங்கம், வவுனியா நகரசபையின் உறுப்பினர் அப்துல் பாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
 
 
 
 

ad

ad