புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013


சென்னையில் புதிய கேபிள் டி.வி. ஒளிபரப்பு 
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சார்பில் கூட்டுறவு முறையில் தமிழக கேபிள் டி.வி. கம்யூனிகேஷன்ஸ் (டி.சி.சி.எல்) தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் டிஜிட்டல் கேபிள் டி.வி. ஒளிபரப்பை சென்னையில் நேற்று தொடங்கியது.



சென்னை சேத்துப்பட்டு கிளப் சாலையில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தில் நடந்த விழாவில் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க தலைவர் அகிலன் புதிய கேபிள் டி.வி.யின் டிஜிட்டல் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர்,  ‘’சென்னையில் 580 கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவு முறையில் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளோம்.

முதல் கட்டமாக 1 லட்சம் செட் டாப் பாக்சுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. வருகிற 20-ந்தேதி முதல் மேலும் 2 1/2 லட்சம் செட் டாப் பாக்சுகள் ஜூலையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

வருகிற மார்ச் மாதத்துக்குள் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

செட் டாப் பாக்ஸ் ரூ.1350-க்கு வழங்குகிறோம். எச்.டி. எனப்படும் உயர் தொழில் நுட்பம் கொண்ட செட் டாப் பாக்ஸ் ரூ.3000 ஆகும்.

செட் டாப் பாக்ஸ் மூலம் மாதம் 100 ரூபாய்க்கு 105 சேனல்களை வழங்குகிறோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கில மொழி சேனல்கள், பொழுதுபோக்கு சினிமா, இயற்கை, சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் குழந்தைகள் சேனல்கள் இதில் இடம் பெறும்.

ரூ.125, ரூ.150, ரூ.200, ரூ.250 போன்ற மாத கட்டணங்களிலும் தனி பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளோம்.

விரும்பிய டி.வி. நிகழ்ச்சிகளை ரெக்கார்டு செய்து பார்க்கும் வசதி, ஆன்லைன் மருத்துவம், கல்வி, வீடியோ போன், வீடியோ கான்பரன்சிங், இண்டர்நெட், ஐபி டி.வி ஆகிய வசதிகளும் எங்கள் செட் டாப் பாக்சில் உள்ளன.

இதுதவிர புதிய சினிமாவை வெளியிடும் வசதியும் அளிக்கப்பட்டு உள்ளது. புதிய சினிமா வெளியிடும்போது அதன் பார்வை நேரத்தை ஒரு முறைக்கு மேல் அதிகரித்து வழங்கும் வசதியையும் அளிக்கிறோம். எங்கள் செட் டாப் பாக்ஸ் மூலம் வெளியிடப்படும் புதிய சினிமாவை பதிவு செய்ய முடியாது. இது சினிமா தயாரிப்பாளர்களுக்கு அளிக்கும் பாதுகாப்பாகும்.

எச்.டி. செட் டாப் பாக்சில் மீடியா பிரஷர், பேஸ்புக், இணைய தளரேடியோ, டி.வி. நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளன.

ரெயில் டெல் இணைப்புகள் மூலம் வீடுகளுக்கு பிராட்பேண்ட் சேவையை அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தொலைத்தொடர்பு மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறினார்.

ad

ad