புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013



 அலகாபாத் ரயில் நிலையய நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
அலகாபாத், பிப்.11 (டி.என்.எஸ்) உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயிலைப் பிடிக்க அலகாபாத் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.


நேற்று இரவு 7 மணி அளவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் 6வது பிளாட் பாரத்துக்கு செல்லும் நடை மேம்பாலம் மீது ஏறினார்கள். அப்போது 5வது பிளாட் பாரத்துக்கும் 6வது பிளாட்பாரத்துக்கும் இடையில் உள்ள நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள்.

இதையடுத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கியவர்களில் சுமார் 20 பேர் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ரயில்வே மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 16 பேர் இறந்தனர். இதனால் அலகாபாத் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அலகாபாத் ரெயில் நிலைய நடை மேம்பாலத்தில் பொது மக்கள் நெரிசலில் சிக்கியதற்கு போலீசார் திடீரென நடத்திய தடியடி தான் காரணம் என்று கூறப்படுகிறது. (டி.என்.எஸ்)

ad

ad