புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2013

மிலன் அணிக்கெதிரான சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி தோல்வியடைந்தது.
உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 58 ஆவது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்களில் நடக்கிறது
. ரியல் மார்ரிட், ஏ.சி. மிலன், உள்ளிட்ட 32 அணிகள் எட்டுப் பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இதில் பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின.

இத்தாலியின் உள்ள மிலன் நகரில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான முதல் போட்டியில் ஏசி மிலன்,பார்சிலோனா அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மிலன் அணிக்கு போடெங் (57 ஆவது நிமிடம்) முன்டாரி ( 81 ஆவது நிமிடம்) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். இதற்கு பார்சிலோனா அணியினரால் பதிலடி  கொடுக்க முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் மிலவன் அணி 2.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா அணியின் நட்சத்திர  வீரர் லயோனல் மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றினார்.
வரும் மார்ச் 12 ஆம் திகதி ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் நடக்கவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2 ஆவது போட்டியில் மீண்டும் மிலன் பார்சிலோனா அணிகள் மோதுகின்றன. இதில் பார்சிலோனா அணி அதிக கோல் வித்தியாசத்தில் (3-0,4-1,5-2----)சிறந்தவெற்றியை பதிவு செய்தால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும்.

ad

ad