புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2013


இலங்கையின் ஜனநாயகத்தை உறுதிசெய்ய ஐநா கூட்டத்தில் விசேட குழு நியமனம்
இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள  ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் அடிப்படையிலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அப்பிரேரணையின் பிரதிகள் தனிப்பட்ட ரீதியில் விநியோகிக்கப்பட்டதை அடுத்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் தேடியறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வற்புறுத்துதல், இந்நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், காணாமல் போவதை தடுத்தல் மற்றும் சுயாதீன நீதித்துறையை உறுதி செய்தல் போன்ற விடயங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும் என்று மேற்படி பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரதான யோசனைகளைத் தவிர, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைத்தல், வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிரந்தரமானதொரு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தல், நபர்களைக் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் கொள்கைகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமைத்தல், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குதல் தொடர்பான பல முன்மொழிவுகளும் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் திருத்தத்துக்கு உட்படுத்தும் வாய்ப்பு உள்ளதென சுட்டிக்காட்டியுள்ள இராஜதந்திர தகவல்கள், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் யோசனையொன்றும் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன.

ad

ad