புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013


ஸ்ரீ கருடாழ்வான் என்றவரின் முக நூலில் இருந்து நன்றி 
முகப்புத்தகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும், அன்னை சோனியாவை அரக்கியாகவும், ராகுல் காந்திக்கு இது போல் நடக்க வேண்டும் என்று சாபம் கொடுத்தும் தங்கள் தமிழ் பற்றை காட்டிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

சந்தடி சாக்கில் நாம் சில விஷயங்களை மறக்கக் கூடாது.

1.2009 தொடக்கத்திலிருந்து, ஆனையிறவு, முல்லைத் தீவு என்று சீட்டுக் கட்டு போல் ஒவ்வொன்றாக வீழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில், பிரணாப் முகர்ஜி, நாராயணன், சிவசங்கர் மேனன் என ஒவ்வொருவரையும், இலங்கை செல்லும் முன், உலகத் தமிழர் தலைவராம் , செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசி விட்டுத்தான் சென்றிருக்கின்றனர்.

2,என்ன பேசினார்கள் என்பதெல்லாம் நமக்கு முழுமையாகத் தெரியாது என்று எடுத்துக் கொண்டாலும், போர் முடிந்த 3 வருடங்களில் இன்று வரை,"காங்கிரஸ் அரசாங்கம் , என்னிடம் முழுத்தகவலை, அந்த சமயத்தில் சொல்லவில்லை"என்று கருணாநிதி குற்றம் சாட்டவில்லை.இன்னும் சொல்லப் போனால், இன்று வரை, அவர்களுடன் தோளோடு தோள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.அடுத்த தேர்தல்களிலும் தொடரலாம்.

3.போர் முடிந்தது.அப்போதும் வெடிச் சத்தம் கேட்டது.தூவானம் இன்னும் விடவில்லை என்று சொன்னவரும் கருணாநிதி.

4.சிதம்பரம் உள்ளிட்ட பலர் டெல்லியிலிருந்து கருணாநிதியுடன் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்திருக்கின்றனர்.

5.போர் முடிந்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீங்கலாக" தான் தன் சுகம்" என்பது போல், திருமா, அரூண்,சித்தன் போன்ற நேசக்கட்சித் தலைவர்களுடன், தன் மகள், அண்ணன் டி.ஆர்.பாலுவை அனுப்பி பரிசுகள் பரிமாறிக் கொண்டது கருணாநிதிக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது.

6.போர் முடிந்து, "அதே தான் தன் சுகம் "என்று தன் குடும்பத்துடன் இடம் பெயர்ந்த வசதி படைத்த தமிழர்கள், மருந்து துணிமணி கொடுத்து அனுப்பிய வணங்காமண் வெளி தேசத்திலிருந்து வந்தும் சென்னையில் தரை தட்டியது.நெடுமாறன் ,திருமா என பலர் அந்த கப்பலை இலங்கை அனுப்ப முயற்சி செய்தும் முடியாமல் போனது.என்ன காரணம் என்றால், அதிலும், தன் கட்சிக்குப் பேர் வர வேண்டும்;அப்படி வந்தாலும், தன் குடும்பத்துக்கு பேர் வர வேண்டும் என்று சுற்றி விட்டு, இழுத்தடித்து நெடுமாறன் சலித்துக் கொண்டு கொடுத்த அறிவுரை பேரில் கனிமொழி காலில் திருமா விழுந்து கடைசியில் அனுப்பியது.

7.இவ்வளவு செய்தும், இடம் பெயர்ந்த தமிழர்களின் வறட்டுக் கௌரவத்தால், அந்த பொருட்கள் மக்கி மண்ணாகி , யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேராமலேயே போனது.

8.எல்லாம் முடிந்தும், அந்தக் கிழவியை, அப்படியே சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பி வைத்தது.
காவல் துறையைத் தன் நேரடிப் பார்வையில் வைத்திருந்த கருணாநிதி.

ஆக,டெல்லி தன் அசைவுகளை அப்படியே சொல்லியிருக்கிறது, கருணாநிதியிடம்.மறுக்க முடியாது.அந்த சமயத்தில் பதவியின் உச்சாணிக் கொம்பில் இருந்தவர்கள் தி மு க மட்டும் தான்.காங்கிரசுக்கு தன் அமைச்சரைவையில் ஒரு இடம் கூட கொடுக்கவும் இல்லை.

ஆக, முதலில் காங்கிரசைக் குற்றம் சொல்வதை விட, திராவிடர்களைத் தான் முதலில் கேட்க வேண்டும்.சாபமிட வேண்டும்..

நண்பர்கள் இங்கே குறிப்பட்டது போல், பிரபாகரன் மகன் இவர்களின் நீரா ரடியா பேரம் போது , தான் கொல்லப்பட்டான்.தி மு க வளப்பமான அதிகாரத்தில் கோலோச்சிய போது தான்,திராவிட குருஜி வீரமணியும், காசுக்காக மட்டும் பொங்கி எழும் வைரமுத்துவும் சாட்சியாக இருந்த போது தான். இந்த சம்பவம் நடந்தது என்றும் சரித்திரம் பதித்திருக்கிறது.

முதலில் டெசோ பார்டிகளான‌ திராவிடர்கள் அவர்கள் மனசாட்சியைத் தொட்டுக் கொள்ளட்டும்..நண்பர்கள் இடும் சாபம் முதலில் திராவிடர்களுக்குப் போகட்டும்!

யாரும் மறுக்க முடியாது.

மறக்கக் கூடாது.

ad

ad