புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013



 கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய பெண்
சேலம், பிப்.11 (டி.என்.எஸ்) சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூர் விநாயக்நகரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சித்ரா என்கிற ஜெயசித்ரா (27), இவருக்கும் சேலம் நாராயண நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா இன்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா செய்தார். 


இதுப்பற்றி அவர் கூறும் போது, எனது மாமனார், மாமியார் வரதட்சணை கொடுமை செய்கிறார்கள். இது குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் 3 முறை எனக்கு கவுன்சிலிங் கொடுத்து என்னை சேர்ந்து வாழ சொன்னார்கள். ஆனாலும் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். மேலும் என் மீது சந்தேகப்படுகிறார்கள்.

இதுகுறித்து நான் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தால் என் மீதே போலீசார் பழி சுமத்துகிறார்கள். இருதரப்பையும் விசாரிக்காமல் போலீசார் செயல்படுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் அவரை சமாதானப்படுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றனர். (டி.என்.எஸ்)

ad

ad