புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


ஜனாதிபதி மகிந்த இந்திய வருகைக்கு எதிராக பிரதமர் மன்மோகன் வீடு முற்றுகை: டெல்லியில் வைகோ கைது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தை கண்டித்து, மதிமுக சார்பில் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை டெல்லி பொலிசார் கைது செய்துள்ள சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறன.
டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி வைகோ தலைமையில் பேரணி மேற்கொள்ள மதிமுகவினர் முயன்றனர். அதன்போது வைகோவை தடுத்து நிறுத்தி பொலிசார் கைது செய்தனர்.
முன்னர், எம்.பி. கணேசமூர்த்தி உட்பட 500க்கும் மேற்பட்ட மதிமுகவினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணிக்காக தயாராகினர். பேரணிக்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி பேரணி நடக்காமல் இருக்க பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததால், வைகோ கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி அவர் தலைநகர் டெல்லி செல்வதை ராஜபக்ச தவிர்த்துள்ளார்.
அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டக்கிற்கு வந்துள்ளார். அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பிகாரில் உள்ள புத்த கயா செல்லும் அவர், இன்று மாலை திருப்பதி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அங்கிருந்து சாலை வழியாக திருமலைக்கு செல்லும் ஜனாதிபதி, இரவு மலையிலேயே தங்குகிறார். நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யும் அவர், காலை ஒன்பது மணிக்கு சிறப்பு விமானத்தில் கொழும்பு புறப்பட்டு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad