புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013



மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்

இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின்
12வயது மகன் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்டதாக வெளியான ஒளிப்படங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போரின் முடிவில், அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதமாபிமான சட்ட மீறல்களின் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக்கூறுவதற்கு ஆதரவளித்தோம்.
நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்
.

ad

ad