புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2013



புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றலாம் என்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.   மேலும்,  பசுமை தீர்ப்பாயத்தில் மருத்துவமனைக்கு எதிராக  வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


மருத்துவமனையாக மாற்ற சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதி சரிதான் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. நீதிபதி சொக்க லிங்கம் தலைமையிலான பசுமைத் தீர்ப்பாயம் இந்த பரபரப்பு  தீர்ப்பை வெளியிட்டது.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, புதிய தலைமை செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவ மனையாக மாற்ற, மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, டில்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டடத்தில், கடந்த, 30ம் தேதி, மருத்துவ மனையின் ஒரு பிரிவு செயல்பட துவங்கியது. எனவே, மருத்துவமனையின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் வீரமணி என்பவர், கடந்த, 5ம் தேதி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்சில் மனு தாக்கல் செய்தார். 
மனுவை விசாரித்த தீர்ப்பாய பெஞ்ச், கடந்த, 6ம் தேதி, மருத்துவமனை செயல்பட இடைக்கால தடை விதித்தது. அதன் பின், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கடந்த, 15ம் தேதி வரை, தினமும் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
 இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு, இன்று காலை, 11:00 மணிக்கு வழங்கப்படும் என, தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச், நேற்று அறிவித்தது.  அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ad

ad