புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


ஐ.சி.சி தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் இலங்கை

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.
இதில் 131 புள்ளிகளுடன் இலங்கை முதலிடத்தில் நீடிக்கிறது. மேற்கிந்திய தீவுகள் (122 புள்ளி), இந்தியா(119) அடுத்த இரு இடங்களை தக்க வைத்துக் கொண்டன.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வீராட் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 9வது இடத்தில் தொடர்கிறார். மற்ற இந்திய வீரர்களான யுவராஜ் சிங் (13வது இடம்), கம்பீர் (17வது இடம்) "டாப்-20" வரிசையில் உள்ளனர்.
இப்பட்டியலில், முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், மேற்கிந்திய தீவுகளினட கிறிஸ் கெய்ல், இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன உள்ளனர்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் அஷ்வின் 16வது இடத்தில் உள்ளார். "டாப்-20" வரிசையில் இந்திய வீரர்கள் வேறு யாரும் இல்லை. முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீட் அஜ்மல், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ், இங்கிலாந்தின் சுவான் நீடிக்கின்றனர்.
சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் யுவராஜ் சிங் 3வது இடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

ad

ad