புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013

Photo: இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி
பிப் 21, 2013
    
1

இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் இது ஒரு இனப்படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதன் எதிரொலியாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் தமிழக அரசால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி -சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

ad

ad