புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2013


தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் கோரிவந்த நிலையில் அது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.
எனினும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது உயர் பீடம் அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா மூவர் இந்த உயர் பீடத்தில் உள்ளடக்கப்படவுள்ளதுடன் இந்த கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து மாவட்ட ரீதியிலும் குழுக்களை அமைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கூட்டத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கோ.கருணாகரம் (ஜனா), சிவாஜலிங்கம், சுரேஸ்பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஆனந்தசங்கரியும், புளோட் சார்பில் பவான் ஆர்.ஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ad

ad