புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2013


இலங்கையில் மாநாட்டினை நடத்துவது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சர்வதேச அரங்கில் இலங்கை அரசினை தனிமைப்படுத்தும் நோக்கில் இவ்வாண்டு இலங்கையில் நிகழவிருப்பதாக கூறப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடாத்தக் கூடாது என பல சர்வதேச நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இலங்கையில் மாநாட்டினை நடத்துவது என்பது பொதுநலவாய அமைப்பின் நிலைப்பாட்டுக்கு முரணானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகின்றது.
இதுதொடர்பில் உடனடியாக வழக்கொன்றினை தொடுப்பது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
குடிசார் உரிமைகள் அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தம் மூலமும் (ICCPR), சித்திரவதை மற்றும் கொடுமைகள், மனிதாபிமான மற்றதும் தரக் குறைவானதுமான நடைமுறைகள் என்பவற்றிற்கு எதிரான உடன்படிக்கை (CAT)  மூலமும் பொதுநலவாய அமைப்பானது முறையே 1976, 1987 ஆகிய இரு ஆண்டுகளிலும் மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையினை கண்டிக்க வேண்டிய பாரிய பொறுப்பு பொதுநலவாய அமைப்புக்கு உண்டு என்பது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ளது.
2013ல் இந்த மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதித்தால், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுபோல் ஆகிவிடுவதோடு மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயத்தில் பொதுநலவாய அமைப்பானது வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை எனும் கருத்து ஏற்படும் என்ற நிலையினை வலியுறுத்தும் வகையில் வழக்கினைத் தொடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எண்ணியுள்ளது.
இலங்கை  அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு என்பவற்றினால் பொதுநலவாய அமைப்பின் உள்ளுணர்வையே மீறுகின்றது எனலாம்
ஏலவே பொதுநலவாய அமைப்புக்கு தெரிவித்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாநாடு நடைப்பெறும் நாடு என்ற தகுதி இலங்கைக்கு வழங்கப் படக்கூடாது அல்லது குறைந்த பட்சம் இந்த மாநாடு ஒத்திவைக்கப்படல் வேண்டும் எனவும் கோரியிருந்தது.
1995ல் நைஜீரியாவிலும், பின்னர் 2004ல் பாகிஸ்தானிலும் நிகழ்ந்தது போன்று இலங்கையைக் கண்டித்துப் புறந்தள்ளல் வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம்தான் பொதுநலவாய அமைப்பு நாடுகள் மனித உரிமையைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளன என்பதை உலகுக்கு உணர்த்த முடியும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad