புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2013



விறுவிறுப்பாய் நடக்கிறது பனி விழும் மலர்வனத்தில் இளையராஜாவின் இன்னிசை மழைக்கான மேடை அமைப்புப் பணிகள்!!! (காணொளி)
இன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி இன்றே களை கட்டத் தொடங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். 

 
கனடாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு இன்னிசை நிகழ்விற்காக காத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில்  ரோஜர்ஸ் சென்ரரில் மேடை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்புடன் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
என்ன தான் நடக்கிறது எனப் பார்ப்பதற்காக ரோஜர்ஸ் சென்றரை சிறு விசிட் அடித்த நாங்கள் அசந்தே போய் விட்டோம். கொட்டும் பனியிலும் இரவு முழுவதும் கண் விழித்து விழா மேடையை தயார் செய்து வருகின்றனர் நூற்றுக்கணக்கான பணியாளர்கள்.
 
நிகழ்ச்சியை வழங்கவிருக்கும் ட்ரினிட்டி ஈவண்ட்ஸ் நிறுவன மேலாளர்களும் சளைக்காமல் பம்பரம் போல் சுற்றி அனைத்தையும் விறுவிறுப்புடன் செய்வதைக் காண முடிந்தது. இகுருவி வாசகர்களுக்காக விறுவிறுப்பான இன்னிசை விழா மேடையிலிருந்து சிறிய காணொளி


ad

ad