புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013


ஜனாதிபதி மகிந்த இந்தியா வருகைக்கு எதிர்ப்பு: ஓசூரில் ரயில் மறியலில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல்
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய ஜனாதிபதி ராசபக்‌சவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில்
மறிப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழக இளைஞர் முன்னணித் தலைவருமான தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தொழிற்சங்கப் பிரிவுத் தலைவர் தோழர் செந்தமிழன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் தோழர் குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்ட அமைப்பாளர் திரு முருகேசன், இளந்துளிர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வடிவேலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில், 102 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயக வழியில், மகிந்த ராசபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டுள்ள சூழலில், ஓசூர் பொலிஸாரின் சனநாயக விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது, ஓசூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அசோக் திருமண நிலையத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad