புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013


தமிழீழ சுதந்திர சாசனம்- உலகப் பரப்பெங்கும் முரசறைவுக்கான அறிமுக அரங்கங்கள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க
தாயகம் - தேசிய - தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முரசறையும் தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி சனிக்கிழமை முதல் தமிழர்கள் பரந்து வாழும் உலகப்பரப்பெங்கும் தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான பொதுக்கூட்டங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினாலும் இச்செயற்திட்டத்தில் பங்காற்றும் தமிழ் அமைப்புகளினாலும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளில் ஈழத்தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் ஓருங்சேர தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படுகின்றது.
தென்னாபிரிக்க விடுதலைக்கு முக்கிய காரணியாக விளங்கிய ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் முரசறைந்த தென்னாபிரிக்க விடுதலை சாசனம் மற்றும் பாலஸ்த்தீன விடுதலை அமைப்புகள் முரசைறந்த பலஸ்தீன விடுதலை சாசனம் ஆகியன உலக வரலாற்றில் முக்கிய பதிவுகளாகவுள்ளன.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் உலகத் தமிழர்களால் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனமானது அமையவிருக்கும் எதிர்கால தமிழீழம் குறித்தான ஓர் வரைவினை உலக அரங்கிற்கு முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சாசனத்தினை உருவாக்கத்திற்கு அனைவரது கருத்துக்களை அறியும் பொருட்டு கேள்விக்கொத்தொன்று வெளியிடப்படுவதோடு விளக்க கையேடு ஒன்றும் வெளிவருகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை (23-02-2013) பிரித்தானியாவில் இதற்கான முதலாவது அறிமுக அரங்கம் Harrow Civic Centre / Station Road/ Harrow / HA1 2XY குறித்த இந்த முகவரியில் மாலை 5:30 முதல் இரவு 8:30 மணிவரை இடம்பெறுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை (24-02-2013) அமெரிக்க - கனேடிய எல்லை நகரான பவ்லோவில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுத்துக் சிறப்பிக்கும் அறிமுக அரங்கம் இடம்பெறுகின்றது.
Auditorium1020 Humboldt Parkway / Buffalo, New York 14211 எனும் முகவரியில் மாலை 3:00மணிக்கு இடம்பெறவிருக்கின்ற இந்த நிகழ்வில் கனேடிய தமிழ் உறவுகள் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் கட்டணமின்றிய பயண ஒழுங்குகள் Scarborough,Markham, Mississauga, Brampton ஆகிய பகுதிகளில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நிகழ்வுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு பிரித்தானியா: 07711558123 / 07960412227 கனடா - அமெரிக்கா :  716-352-8300 /  416-854-4143 /  647- 209-4100 /  647-848-5157ஆகிய தொடர்பிலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிற நாடுகளில் வரும் வாரங்களில் தமிழீழ சுதந்திர சாசன அறிமுக அரங்கங்கள் இடம்பெறவுள்ளன.

ad

ad