புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2013

தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி வீரப்பன் கூட்டாளிகள் மேல்முறையீடு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்புநாளை அவர்கள் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 1993–ம் ஆண்டு ஏப்ரல் 9–ந் தேதி மேட்டூர் அருகே பாலாறு என்ற இடத்தில் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில்
கர்நாடக சிறப்பு அதிரடிப்படை தலைவர் டி.ஹரிகிருஷ்ணா, சப்–இன்ஸ்பெக்டர் சகீல் அகமது மற்றும் போலீசார், வனத்துறை அதிகாரிகள் உள்பட 22 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் தமிழக சிறப்பு அதிரடிப்படை அதிகாரி கோபாலகிருஷ்ணன் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் மரண தண்டனை பெற்ற ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் ஆகிய நான்கு பேரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கருணை மனுக்களை கடந்த புதன்கிழமை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் அவர்களை தூக்கிலிட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை அவர்கள் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகள் 4 பேரும் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அவசர வழக்காக தங்கள் மனுவை விசாரிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவசர விசாரணைக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி, அவர்களின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதேபோல் நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனுவை சமீபத்தில் ஜனாதிபதி நிகராகரித்தார். அதன்பின்னர் அப்சல் குரு திகார் சிறையில் கடந்த 9-ம் தேதி தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ad

ad