புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013


மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி!
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதா
ன மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு, எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும் அவர்கள் வாழ்ந்த தடையங்களையும் முற்றாகத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகிறது
உலக நாடுகளின் கண்டனங்களை சற்றும் பொருட்படுத்தாது தமிழ் இன அழிப்பில் அது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சிறீலங்கா அரசின் இந்த தமிழ் இனப்படுகொலை மொழி, இனம், பண்பாடு மற்றும் சமயம் ஆகியவற்றில் ஒன்றுபட்ட மலேசிய தமிழர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. மலேசிய தழிழர்கள் சிறீலங்கா அரசின் தமிழ் இனப்படுகொலையையும், தமிழர்களுக்கு எதிராக அந்த அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் கொள்கைகளையும் மலேசிய தமிழர்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றனர். சிறீலங்கா சிங்கள அரசின் தமிழ் இன அழிப்பு கொள்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது மலேசிய தமிழர்களின் அடங்கா வேட்கை.
மலேசிய தமிழர்களின் இந்த வேட்கைக்கு, அவர்கள் சிறீலங்கா தமிழர்கள் மீது கொண்டுள்ள பாச உணர்வுகளுக்கு மலேசிய அரசாங்கம் மதிப்பு அளிக்க வேண்டும். மலேசிய குடிமக்கள் என்ற உரிமையின் அடிப்படையில் மலேசிய அரசாங்கம் சிறீலங்காவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்பதோடு, சிறீலங்காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானம் இன்று மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை சந்திப்பில் நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை மணி 10.00-லிருந்து பிற்பகல் மணி 1.00 வரையில் நடைபெற்ற அந்த வட்டமேசை விவாதத்தில் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும், தனிப்பட்ட முறையிலும் 70 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இச்சந்திப்பை சிறீலங்கா மீதான மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புக்குழுவும் மலேசிய தமிழர் பேரவையும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். மனோகரன், ஆர். சிவராசா, எம். குலசேகரன், சார்ல்ஸ் சந்தியாகு, போர்ன்ஸ் கவன்ஸ், முன்னாள் செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், செனட்டர் சந்திர மோகன் ஆகியோருடன் சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம், பெர்சே இணைத் தலைவர் அம்பிகா, நியட் தலைவர் ஹஜி தஸ்லிம், தமிழ்ப் பேரவை தலைவர் டாக்டர் ஐயங்கரன், தமிழ் அறவாரியம் தலைவர் சி. பசுபதி ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற இந்த சிறீலங்கா மீதான வட்டமேசை சந்திப்புக்கு முழு ஆதரவு தெரிவித்து அதில் பங்குபெற சம்மதம் தெரிவித்திருந்த சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறையின் அமைச்சர் நஸ்ரி முகமட் அவசரப் பணி நிமித்தம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
மேலும், இந்தியாவிலிருந்து டாக்டர் பால் நியுமேன், சிறீலங்காவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் பிரநிதியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நான்கு பாகங்களாக நடத்தப்பட்ட இந்த வட்டமேசை சந்திப்பு கா. ஆறுமுகம், எம். குலசேகரன், ஆர். சிவராசா மற்றும் எம். மனோகரன் ஆகியோரின் தலைமையில் நடத்தப்பட்டது.
பாலஸ்தீன மக்கள் விடுதலை போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிர ஈடுபாடு காட்டும் மலேசியா, சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில் கண்டும் காணாமல் இருப்பது சிறீலங்கா அரசால் கொடுமைப்படுத்தப்படுபவர்கள் தமிழர்கள் என்பதால்தான் என்று கூறிய கா. ஆறுமுகம், மலேசியாவின் வெளிநாட்டு கொள்கை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், ஐநா தலைமைச் செயலாளர் ஐநா சாசனத்தின் கீழ் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தனிச் சிறப்பு அதிகாரத்தின் கீழ் சிறீலங்கா இனப்படுகொலை விவகாரத்தை ஐநா பாதுகாப்பு மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறீலங்கா மீது விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை வேண்டும் என்று கூறிய அவர், இதனை வலியுறுத்தி கடந்த 13.2.2013 இல் கோலாலம்பூரிலுள்ள ஐநா அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது என்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சிறீலங்காவில் வாழ்ந்து வந்த தமிழர்கள் எவ்வாறு சிங்களவாதிகளால் சீரழிக்கப்பட்ட விபரத்தை டாக்டர் ஐயங்கரன் சுருக்கமாக பட்டியலிட்டார்.
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளின் எதிர்வினைதான் விடுதலைப் புலிகளின் தோற்றம் என்றாரவர்.
டாக்டர் பால் நியுமேன், சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் யோகராஜன் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர், அம்பிகா, சார்ல்ஸ் சந்தியாகோ, எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோரும் அவர்களின் கருத்துகளையும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் விவரித்தனர்.
இறுதியில், நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :
1. மலேசிய அரசாங்கம் சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். சிறீலங்காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
2. மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை மலேசியா முன்மொழிய வேண்டும் அல்லது மற்ற நாடுகளால் கொண்டு வரப்படும் அது போன்ற தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
3. ஐநா மனித உரிமைகள் மன்ற ஆணையரின் பரிந்துரை அமலாக்கப்பட வேண்டும்.
4. சிறீலங்கா அனைத்துலக கிரிமினல் குற்ற நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இத்தீர்மானங்கள் உடனடியாக மலேசிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என்று பின்னர் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறீலங்கா இனப்படுகொலை விவகாரம் குறித்து விரைவில் ஒரு பேரணி நடத்தப்படும் என்றும் கா. ஆறுமுகம் கூறினார்.

ad

ad